பக்கம்:நாடகக் கலை 1.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 13 1918-ல் தொடங்கிய என் நாடக வாழ்க்கை, கடிகனுகவும், நாடக ஆசிரியனுகவும், நாடகத் தயாரிப் பாளனுகவும் என்னை இதுவரை வளர்த்து வந்திருக் கிறது. இதற்காக நான் பெருமைப்படுகிறேன். அக்கால அவல நிலை நான் நாடகத்துறையிலே இறங்கிய அந்த காளில் நாடகக் கலைஞர்கள் மிகவும் இழிவாகக் கருதப்பட்டு வந்தார்கள். கொலைகாரன், கொள்ளைக்காரன் முதலிய வர்களைக் கண்டால் மக்கள் எப்படிப் பயந்து ஒதுங்கி வாழ்வார்களோ அதே நிலைதான் நாடகக்காரனுக்கும் இருக் துவந்தது. நாடகக்காரனென்ருல் குடியிருக்க வீடு கொடுக்கக்கூட மக்கள் பயந்தார்கள். அநேக ஊர் களில் மயானக்கரைக்கு அருகே பேய்கள் வசிக்கும் வீடென்று ஒதுக்கப்பட்ட வீடுகளில் தான் அந்தக் காலங் களில் நாங்கள் குடியிருக்க கேர்ந்தது. ஒரு தொழிலு மில்லாதார் நாடகக்கார ரானுர்’ என்பது ஒரு பழமொழி யாகக்கூட உருவாகி இருந்த காலம். கல்ல சூழ்நிலை அந்த அவல நிலையெல்லாம் மாறி இன்று நாடகக் கலைஞர்களைப் பாராட்டுகிருர்கள்; காடகக் கலைஞர்களைச் சமுதாயத்தின் முக்கிய அங்கமாகக் கருதுகிருர்கள்: நாடகக்கலை வளர்ச்சியால் நாடு வளர்ச்சி பெறுமென்று கம்புகிருர்கள். நாடக வளர்ச்சிக்காக அரசியலாரே சங்கம் அமைத்திருக்கிருர்கள்; பட்டம் வழங்குகிருர்கள்; பரிசு கொடுக்கிருர்கள்; பாராட்டுகிருர்கள்; பல்கலைக கழகத்திலே நாடகத்தைப்பற்றிப் பேச நாடகக்காரனுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/14&oldid=1322544" இலிருந்து மீள்விக்கப்பட்டது