பக்கம்:நாடகக் கலை 1.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காடகத்தில் பிரசாரம் 145 ச8ணயின் அலங்கோல அவல நிலைகளைத் தெளிவாகக் காட்டியும் மக்களிடையே பிரசாரம் செய்யும் ஒரு சிறந்த காடகம். 'சந்திரகாந்தா நாடகம், மதத்தின் பாதுகாப் பாளர்கள் என்று சொல்லப்படும் மடாதிபதிகளில் சிலர் வெளியே சமயப் பிரசாரம் செய்வதாகக் காட்டி உள்ளே இரகசியத்தில் காமக் களியாட்டங்கள் நடத்திவரும் அக் கிரமங்களை அம்பலப்படுத்துகிறது; குறுகில மன்னர் கள் செய்யும் மோசடிகளையும் விளக்குகிறது. இன்னும் தாசிகள் கோவிலுக்குப் பொட்டுக் கட்டி விடப்படுவது தவறு என்பதை விளக்கவும், கிழவர்கள் இளங்குமரியை மணக்கும் கொடுமையைக் காட்டவும் சீர்திருத்த முறையில் பல நாடகங்கள் எங்கள் குழுவில் கடிக்கப் பெற்றன. குமாஸ்தாவின் பெண் சாதி மத பேதங்களை எதிர்த்துப் போராடவும், பெண்ணுரிமையைப் பேணி வளர்க்கவும், கலப்பு மணத்தை ஆதரிக்கவும், விதவையர் துயரை எடுத்துக் கூறவும் காடக மேடையை நல்ல முறையில் காங்கள் பயன்படுத்தி வந்திருக்கிருேம். எங்களைப் போலவே மற்றும் பலர் நாடக மேடையைப் போற்றி வந்திருக் கிருர்கள். நாங்கள் கடத்திய குமாஸ்தாவின் பெண் என்ற சமுதாயச் சீர்திருத்த நாடகம் மக்கள் மனத்தில் பெரிய மாற்றத்தை உண்டாக்கியது. இதற்கு எடுத்துக் காட்டாக ஒன்று கூறுகிறேன். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/145&oldid=1322691" இலிருந்து மீள்விக்கப்பட்டது