பக்கம்:நாடகக் கலை 1.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

重$2 நாடகக் கலை விட்டு, அப்பா சமீபத்தில் தண்ணிர் இருக்கிறது, கொண்டு வருகிறேன்' என்று சொல்லிவிட்டுச் சற்று துாரத்திலிருந்த சுனைக்குப் போய்த் தண்ணிரை மொண்டான். எங்கிருந்தோ அம்பு ஒன்று விரைந்து வந்து அந்த இளைஞனின் மார்பில் பாய்ந்தது. இளைஞன் அப்பா, அம்மா’ என்றலறிய வண்ணம கீழே சாய்ந்தான். அந்தச் சத்தத்தைக் கேட்டதும் அங்கே ஓர் அரசன் வில்லும் கையுமாக ஓடிவந்தான். அந்த அரசன் பெயர் தசரதன். அவன் வேட்டையாட வந்த ஒர் அரசன். இளைஞன் தண்ணிர் மொண்ட சத்தம் கேட் டவுடனே, ஏதோ மிருகம் தண்ணிர் குடிக்கிறது என்று கினைத்துப் புதர் மறைவிலிருந்து பானத்தை எய்துவிட்டான். என்ன செய்வது? இளைஞன் ஒருவன் அம்புப்பட்டு மெய்ர் கோக அலறித் துடிப்பதைக் கண்டு அரசன், தான் அறியாமல் செய்த குறறத்தை மன்னிக்கும்படியாக மன்ருடின்ை. மரணத் தருவாயிலிருந்த அந்த இளைஞன், 'ஐயா, நீங்கள் தெரியாமல் செய்ததை கான் மன்னித்துவிட்டேன். என் உயிர் பிரியப்போகிறது. இந்தச் சமயத்தில் எனக்கு, ஓர் உதவி செய்யவேண்டும் என்று அரசனை வேண்டி னை. "தாகத்திற்குத் தண்ணிர் வேண்டுமென்று கேட்ட என் வயது முதிர்ந்த தாயும் தந்தையும் சிறிது தூரத் தில் இருக்கிருர்கள். அவர்கள் கண் தெரியாதவர்கள்; கடக்கவும் முடியாதவர்கள். அவர்களுககுக் கொஞ்சம் தண்ணிர் கொண்டு போய்க் கொடுத்து அவாகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/152&oldid=1322698" இலிருந்து மீள்விக்கப்பட்டது