பக்கம்:நாடகக் கலை 1.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்ாடகத்தில் பிரசாரம் 153 தாகத்தைச் சாந்தி செய்யுங்கள். அவர்கள் தண்ணிர் குடிக்குமுன் எதுவும் பேச வேண்டாம்; கான் இறந்து விட்ட சேதியைத் தண்ணிர் குடித்த பின் சொல்லுங்கள்: என்று கூறித் தன் உயிரை விட்டான். இந்தக் கதை இராமாயணத்தோடு ஒட்டிய ஒரு பழைய கதைதான். சாகும் தருவாயிலும் பெற்றவர் களுக்குத் தனது கடமையைச் செய்த இப்பேர்ப்பட்ட கல்ல இளைஞர்களின் கதையை காடகமாக நடித்துக் காட்டினல் சிறுவர்களுக்கு எவ்வளவு நன்மை ஏற்படும்? நாடகத்தில் பிரசாரம் என்ருல் இதைப் போன்ற நல்ல எண்ணங்களை மனத்தில் பதிய வைக்க வேண்டும். பிரசாரம் என்ருல் என்ன? பிரசாரம் என்பதற்குப் பொருள், ஒரு கருத்தை அல்லது கொள்கையைத் திரும்பத் திரும்ப எடுத்துச் சொல்லி அதை நாடெங்கும் பரவச் செய்வது. இத்தகைய பிரசாரங்கள் இப்போது நாடகங்களின் மூலம் தமிழ் நாடெங்கும் பரவி வருகின்றன. ஆல்ை கல்ல கருத்து கள், உயர்வான எண்ணங்கள் பரவவில்லை. நாடகம் எழுதுவது மிகவும் கடினமானது என் பதை முன்பே சொன்னேன். இப்போது தமிழ் காட்டில் திரைப்படங்கள் மலிந்துள்ள இன்றையச் சூழலில் காடகம் எழுதுவது மிக எளிதான ஒன்ருகக் கருதப் பட்டுவிட்டது. நா.-10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/153&oldid=1322699" இலிருந்து மீள்விக்கப்பட்டது