பக்கம்:நாடகக் கலை 1.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#54 நாடகக் கலை பண்புகள் கிலைக்கவேண்டும் தாய் மொழியாகிய தமிழைச் சரியாகப் படிக்கரத வர்கள்கூட நாடகம் எழுதி அனுப்புகிருர்கள். காலைந்து நாடகப் போட்டிகளில் நாடகத்திற்காக வந்த பிரதி களைப் படிக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. அந்த அனுபவத்தைக் கொண்டு சொல்லுகிறேன். தமிழனுக்கென்று சில பண்புகள் இருக்கின்றன; நாகரிகம் இருக்கிறது; மரபு இருக்கிறது. இவற்றை யெல்லாம் ஆழ்ந்து படித்துத் தெரிந்து கொண்ட அறிவாளிகள் தாம் காடகம் எழுதவேண்டும். புதுமை மோகம் மனிதகுலம் இன்று எல்லாவற்றிலும் புதுமை, புரட்சி, மறுமலர்ச்சி என்று பேசி வருகிறது. கதையில் புதுமை, கருத்தில் புரட்சி, எழுத்தில் உணர்ச்சி என் றெல்லாம் விளம்பரங்களில் பார்க்கிருேம். பொது மக்களுடைய இந்தப் புதுமை ஆர்வத்தைப் பயன் படுத்திக் கொண்டு புதுமையென்ற போர்வையில் பொல்லாங்கு செய்கிறர்கள் சிலர். மக்கள் மறுமலர்ச்சி மோகத்தினுல் புதுமை என்ற பெயரால் கடமாடு பவைகள் கல்லனவா, தீயனவா என்பதைக் கூடச் சிந்தித்துப் பார்க்கத் தவறிவிடுகிருர்கள். புதுமை வரவேற்கப்படும்போது, அல்லது புதுமை உருவாக்கப்படும்போது, பழமை அத்தனையும் குழி தோண்டிப் புதைக்கப்பட வேண்டியவை என்ற முடிவுக்கு வந்து விடுகிருர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/154&oldid=1322700" இலிருந்து மீள்விக்கப்பட்டது