பக்கம்:நாடகக் கலை 1.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் காடக வரலாறு 15 வளர்ச்சியையும் அளவுகோலாகக் கொண்டு பார்த்தால் கமக்கு உண்மை விளங்கும். இந்தக் கண்னேட்ட த் தோடுதான் தமிழ் நாடக வரலாற்றை நாம் ஆராய வேண்டும். நாடகம் என்ருல் என்ன? நாடகம் கலைக்கரசு; காட்டின் காகரிகக் கண்ணுடி; பாமரர்களின் பல்கலைக் கழகம். உணர்ச்சியைத் து.ாண்டிவிட்டு, உள்ளத்தில் புதைந்து கிடக்கும் அன்பையும் அறிவையும் தூய்மைபையும் வெளிப் படுத்தி, மக்களைப் பண்படுத்தும் மகத்தான கலை. நாடகம் என்ருல் என்னவென்பது உங்களுக்குத் தெரியும். உங்களில் பலரும் பார்த்திருப்பீர்கள். எனவே, காடகக் கலை என்பதைப்பற்றி உங்களுக்கு விளக்குவ தற்காக நான் இங்கே இலக்கிய ஆராய்ச்சி எதுவும் கடத்தப் போவதில்லை. நாடு-அகம்-நாடகம்; காட்டை அகத்தில் கொண் டது நாடகம். அதாவது,நாட்டின் சென்ற காலத்தையும் கிகழ்காலத்தையும் வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவதால் காடு-அகம்-நாடகம் என்று பெயர் பெற் றிருக்கிறது. நாடு அகம். அதாவது, அகம்-காடு; உன்னுள் கோக்கு உன்னை யுணர்; அகத்தை நாடு, என்றெல்லாம் பலவிதமாக அறிஞர்கள் இதற்குப் பொருள் கூ றுவார்கள். சுருக்கமாகச் சொல்லவேண்டுமானுல் நாடகம் "உலக நிகழ்ச்சிகளைக் காட்டும் கண்ணுடி’ என்பது முற்றிலும் பொருந்தும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/16&oldid=1322546" இலிருந்து மீள்விக்கப்பட்டது