பக்கம்:நாடகக் கலை 1.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவ்வை தி. க. சண்முகம் எம். எல். சி. அவ்வை தி. க. சண்முகம் ஐம்பத்து நான்கு ஆண்டுகளாக நாடகக் கலைக்கு நற்பணி ஆற்றியவர்; மனேன்மணியம் சுந்தரம்பில் ளயின் மரபிலே வந்தவர்; திருவனந்தபுரத் தில் 26-4-1912-ல் தோன்றியவர். நாடக நால்வர் எனப் புகழப்பெறும் டி. கே. எஸ். சகோதரர்களுள் இவர் மூன்ருமவர்; தவத்திரு சங்கரதாஸ் சுவரீமிகள், கிருஷ்ணசாமிப் பாவலர், கந்தசாமி முதலியார் ஆகிய நாடகப் பேராசிரியர்களின் மாணவர். இவர்தம் நாடகப் பணியின் சிறப்பினல் முத்தமிழ்க் கலா வித்துவ ரத்தினம், அவ்வை, நாடகத் தமிழ் வேந்தர், நடிகர் கோ' என்னும் பட்டங்களே இவர் பெற்றுள்ளார். தமிழ் எழுத்தாளர் சங்கம், தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம், புதுதில்லி சங்கீத நாடக அகாதமி, சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றம், பாரதியார் சங்கம், பேராசிரியர் சிவராஜ பிள்ளை நினைவு மன்றம், பாரதீய வித்யா பவன், இளங்கோ கலைக் கழகம், மாநிலத் தமிழரசுக் கழகம் முதலி யவை இவருடைய பணியினைப் பெற்ற நிறுவனங்களாம். 1953-ல் சிறந்த தமிழ்ப்பட நடிகர்ாகவும். 1961-62-ல் தமிழ்நாடு சங்கீத நாடக சங்கத்திலும் புதுதில்லி சங்கீத நாடக அகாதமியிலும் சிறந்த நாடக நடிகராகவும், 1971-ல் பத்மபூரீயாகவும் இவர் விருதுகள் பெற்றுள்ளார். இவர் எழுதிய மற்ற நூல்களாவன 1. நெஞ்சு மறக்கு தில்லையே (நாடகமேடை அனுபவங்கள்), 2. தமிழ் நாடகத் தலைமையாசிரியர், 3. சங்கரதாஸ் சுவாமிகள் இன் கவித் திரட்டு (தொகுப்பு), 4. சங்கரதாஸ் சுவாமிகள் நூற்ருண்டு விழா மலர் (தோகுப்பு), 5. எனது நாடக வாழ்க்கை, 6. நாடக சிந்தனைகள் (கட்டுரைத் தொகுப்பு) முதலியவை இவரது எழுத்தாற்றலுக்கும் நாடக இலக்கணத்திற்கும் கீர்த்திமணிகளாக விளங்குபவை. இறவாப் புகழ் பெற்ற நாடகச் சித்தரும் வித்தகரு மான அவ்வை சண்முகம் அவர்கள் 1973 பிப்ரவரி 15-ஆம் நாளில் இயற்கை எய்தினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/161&oldid=1322707" இலிருந்து மீள்விக்கப்பட்டது