பக்கம்:நாடகக் கலை 1.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் காடக வரலாறு ar கூடப் பழைய ஆட்டம் என்னும் பதம் வழக்கி" லிருந்து வருகிறது பார்த்தீர்களா? : நாடகக் கொட்டகைக்குச் சிறிது கேரம் கழித்து. வருகிருர் ஒருவர்; அனுமதிச் சீட்டு விற்பவரிடம் ஏன் ஐயா, ஆட்டம் ஆரம்பிச்சாச்சா? எத்தனை காட்சிகள் போயிருக்கும்?' என்று ஆவலோடு கேட்கிருர். அவர் நாடகத்தைப்பற்றித்தான் கேட்கிருர். ஆனால், நீண்ட கால வழக்கத்தின் காரணமாக காடகம ஆட்டமாக, வெளிவருகிறது. கான் சில நாட்களுக்கு முன் கடற்கரையிலே உட்கார்ந்திருந்தேன். ஒரு கண்பர் வந்தார்; கல்ல நாடக ரசிகர். என்ன சண்முகம், ஒன்றரை ஆண்டு. களாக நாடகத்தை நிறுத்திவிட்டீர்களே! மறுபடியும் எப்போ ஆட்டத்தை ஆரம்பிக்கப் போகிறீர்கள்? என்று கேட்டார். மற்ருெரு சமயம் கான் வெளியூர் போயிருந்தேன். அங்கே என்னைச் சந்தித்த பழைய கண்பர் ஒருவர், 'ஆஹா இராஜ ராஜ சோழனைபபோல ஒரு ஆட்டத்தை கான் பார்த்ததேயிலலை' என்று பாராட்டினர். இன்னும் ஒரு ரசிக நண்பர், ‘என்னவோ ஒருஆட்டம் போட்டிர் களே, சமூக நாடகம், அந்த ஆட்டம் மிக நன்ருய் இருந்தது என்ருர். கானும் விளையாட்டாக கான் எங்கும் ஆட்டம் போடவிலலையே' என்றேன். அது, தான ஐயா “வாழ்வில் இன்பம்” என்று ஒரு ஆட்டம’. .ஓ நாடகமா' என்றேன் கான். இப்படி நாடகத்திற்கு ஆட்டம் என்று சொல்வது. இன்றும் சாதாரணமாக வழக்கத்தில் இருந்துவருகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/22&oldid=1322552" இலிருந்து மீள்விக்கப்பட்டது