பக்கம்:நாடகக் கலை 1.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 நாடகக் கலை முன்னையோர் இரு வகைப்படுத்தினர். வேத்தியல் அரசர்கள், பிரபுக்களுக்கென்றும், பொதுவியல் மக்க ளுக்கென்றும் ஆடப்பட்டு வந்ததாகத் தெரிகிறது. அனைத்துமே பாடல்கள் நூல் வடிவில் இதுவரை நமக்குக் கிடைத்திருக்கும் நாடகங்கள் எல்லாம் ஏறக்குறைய முந்நூறு ஆண்டு களுக்குப் பிற்பட்ட வையெனறே சொல்ல வேண்டும. அந்த காடகங்கள் யாவும் பாடல்களாக அமைந்திருக் கின்றனவே தவிர, உரை நாடகம் ஒன்றுகூட இலலை. பழங்காலத் தமிழ் நாடகங்கள் யாவும் பாடல்களாகவே இருந்திருக்க வேண்டும் என்பதை இது மேலும் உறுதிப் படுத்துகிறது. அரிச்சந்திரா, இராமாயணம், மகாபாரதம் முதலிய நாடகங்கள் அனைததும் பாடல்களாகவே இருக்கின்றன. பழங்கால நாடக வசனங்களைப் பெரும்பாலும் கட்டியக்காரன் வந்து பொது வசனமாகப் பேசுவான். அந்த வசனம் நாடகத்தின் ஒரு காட்சிக்கும் மற்றெரு காட்சிக்கும் தொடர்பு ஏற்படுத்துவதாகவே இருக்கும. "அகோ கேளுங்கள் சபையோர்களே! இப்படி யாகத்தானே அரிசசக்திர மகாராஜனுகப்பட்டவன் காடு ககர முதலானதுகளை விசுவாமித்திரமுனியிடம் கொடுத்துவிட்டுக் காசிக்கு வரும் வழியில அநேக துயரையடைந்து காசிநகர்க் கோபுரங் தோன்றக் கண்டு தன் பத்தினிக்குத தெரிவித்துக் கரங்கூப்பித் தொழுகிற விதங் காண்பீர்கள் கனவான்களே!......

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/29&oldid=1322559" இலிருந்து மீள்விக்கப்பட்டது