பக்கம்:நாடகக் கலை 1.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 29 இதுதான் பழங்கால நாடக வசனம். இதற்குப் *பொது வசனம்’ என்று பெயர். நாடக விளக்கத்துக் காகக் கட்டியக்காரன் , இதைப் பேசுவான். இவ்வாறு பேசப்படும் நீண்ட பொது வசனங்களைத் தவிர, பெரும் பாலும் பாடல்கள்தான். பண்டைக் காலக்தொட்டு நாடகத்தமிழ், இசைத்தமிழோடு சேர்ந்தே வளர்ந்து வந்திருக்கிறது. அபூர்வமாகச் சில இடங்களில் பாடலின் கருத்தை யொட்டி வசனமாகவும் சில வரிகள் பேசுவதுண்டு. கேளாய் பெண்ணே சந்திரமதி லோகத்திலுள்ள வர்கள் செய்யும்படியான சகல பாவங்களையும்போக்கத் தக்கதாகிய திவ்ய மகிமை பூண்ட இந்தக் காசி நாடு வந்தோம் பாராய் பெண்ணே! அவ்வளவுதான். உடனே, 'கரங் குவிப்பாய் மயிலே!-இதோ காசி காணுது பார் குயிலே!’ என்று மீண்டும் பாடத் தொடங்கி விடுவான் அரிச்சந்திரன். சீகாழி அருளுசலக் கவிராயரால் எழுதப் பெற்ற இராம நாடகம், அசோமுகி நாடகம் ஆகியவை கட்டியக் காரன் வசனத்தோடு முழுதும் பாடல்களாக அமைக் தவை. இவருடைய காலம் கி. பி. 1712 முதல் 1799 வரை. கொண்டி நாடகங்கள் பதினேழாம் நூற்ருண்டின் பிற்பகுதியில், 1695 முதல், சில கொண்டி நாடகங்கள் இருந்திருக்கின்றன. திருக்கச்சூர் கொண்டி காடகம், பழனி கொண்டி காடகம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/30&oldid=1322560" இலிருந்து மீள்விக்கப்பட்டது