பக்கம்:நாடகக் கலை 1.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 49. களிடம் பயின்றவர்தாம். அந்த நாளிலேயே இவர் ஒரு தமிழ் நாடகக் குழுவை அழைத்துக்கொண்டு, இங்கிலாந்துக்குச் சென்று லண்டன் மாநகரில் தமிழ் காடகங்களை நடத்தி வெற்றி கண்டவர். மகத்தான கெஞ்சுறுதியும், நல்ல புலமையும் படைத்தவர். இவருடைய பால மனேகர சபை சில ஆண்டுகளே இயங்கியது. பின்னர், மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் ஆசிரியராக இருந்து இவர் மேலும் சில சமுதாய நாடகங்களைத் தயாரித்தார். பதிபக்தி, பம்பாய் மெயில், கதர் பக்தி, கவர்னர்ஸ் கப் ஆகிய இவரது காட கங்கள் மெளனப்படங்கள் ஏராளமாக வந்த காலத்தில், அவற்ருேடு வெற்றிகரமாகப் போட்டியிட்டு கின்றன. இவருடைய பதிபக்தி, பம்பாய்மெயில், கதரின் வெற்றி ஆகியகாடகங்களை காங்களும், மற்றும்.சில குழுவினரும் கடித்திருக்கிருேம். பாவலர் குழுவிலும் பல நடிகர்கள் தோன்றிர்ைகள். அவர்களிலே குறிப்பிடத்தக்கவர் திரு. எம். எம். சிதம்பரநாதன். பாவலர் அவர்கள், அண்ணுமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராகவும் மதுரைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றிய திரு. தெ. பொ. மீனுட்சிசுந்தரனுர் அவர்களின் உடன் பிறந்த தமையனுர் என்பது குறிப்பிடத்தக்கது. ாைடக மறுமலர்ச்சித் தந்தை தொழில்முறை நாடகக் குழுவினர்க்கு ஆசிரிய ராகக் கிடைத்த மற்ருெரு மேதை திரு. எம். கந்தசாமி முதலியார் அவர்கள். மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெ னிக்கு ஆசிரியராக வந்து இவர், திரு. ஜே. ஆர். ரங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/51&oldid=1322582" இலிருந்து மீள்விக்கப்பட்டது