பக்கம்:நாடகக் கலை 1.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莎4、 காடகக் கலை காசி விசுவநாத பாண்டியன் எட்டயபுரம் காசி விசுவநாத பாண்டியன் அவர்கள் நுண் கலைகளில் மிகுந்த ஆர்வமுடையவர். அவருடைய நாடகக் குழுவுக்குத் தேவைப்பட்ட காட்சிகளையெல் லாம் அவரே எழுதித் தயாரிப்பார். நாடகத்தை எழுது வதிலும் திறமை வாய்ந்தவர். இராமாயணக் கதையை அடிப்படையாகக் கொண்டு தயாளன் என்னும் பெயரில் அவரே ஒரு நாடகத்தை எழுதி அரங்கேற்றினர். இக் கதை திரைப்படமாகவும் வந்துள்ளது. சமுதாய சீர்திருத்தம் 1937-ஆம் ஆண்டில் நாடக மேடையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. நாடகங்களின் போக்கிலும் கோக்கிலும் புதுமைகள் தென்பட்டன. சமுதாயத்தில் உள்ள குறைபாடுகளைக் கலைக் கண்ணுேடு எடுத்துக் காட்டிச் சீர்திருத்தும் வேகமுடைய குமாஸ்தாவின் பெண் என்ற நாடகத்தைத் திரு. டி. கே. முத்துசாமி அவர்கள் எழுதி எங்கள் குழுவில் அரங்கேற்றினர். * அன்ன பூர்ணிகா மந்திர் என்ற வங்காளி காவலைத் தழுவி எழுதப் பெற்ற இக்காடகம் தமிழ் மக்களிடையே ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், வடுவூர் திரு. துரைசாமி ஐயங்காரின் வித்யா சாகரர் என்ற நாவலும் திரு. முத்துசாமி அவர்களால் நாடகமாக்கப்பட்டு எங்கள் குழுவினரால் கடிக்கப் பெற்றது. சிவலிலாவின் சிறப்பு 1939-ஆம் ஆண்டில் சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் அவர்களால் எழுதப்பெற்ற சிவலிாை என்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/56&oldid=1322587" இலிருந்து மீள்விக்கப்பட்டது