பக்கம்:நாடகக் கலை 1.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 55. காடகத்தை காங்கள் கடித்தோம். இது முற்றிலும் ஒரு புது அமைப்பாகவும், தமிழ் மொழிக்கும் தமிழ் இசைக்கும் சிறப்புச் செய்யும் நாடகமாகவும் விளங் கியது. 1941-ல் மதுரையில் ஒரே காடக அரங்கில் 108 காள்கள் தொடர்ந்து சிவலிலா நாடகம் கடை பெற்றது. 108-வது கடைசி காளன்று மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவர்கள் எல்லோரும் வருகை புரிந்து எங்கள் நாடக சபையைப்பாராட்டி எங்களுக்கு முத்தமிழ்க் கலா வித்துவ ரத்தினங்கள்' என்ற சிறப்புப் பட்டத்தையும் வழங்கினர்கள். ஒளவை அரங்கேறிஞர் 1942 பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி மதுரையில் புலமைக் கடலான தமிழ் மூதாட்டி ஒளவையார் காட கத்தை அறங்கேற்றினுேம். இந்த நாடகம் பி. எதி ராஜுலு அவர்களால் எழுதப்பெற்றது. ஒளவையாரில் கதாநாயகன் என்று ஒரு பாத்திரமே இல்லை. நாடகம் முழுதும்.ஒரு மூதாட்டியே கதாநாயகி. காதல் சிங்காரக் காட்சிகளும் நாடகத்தில் இல்லை. நாடக இலக்கணத் தின்படி தோன்றுதல், திரிதல், ஒடுங்கல் என்ற முறையை அனுசரித்து எழுதப்படாத ஒரு புதுமை காடகம் ஒளவையார். இந்த நாடகம் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட சிறப்பு எங்களுக்கு மட்டு மல்ல, தமிழ் நாடக உலகுக்கே ஒரு மகத்தான வெற்றி யென்று குறிப்பிடவேண்டும். இந் நாடகத்தில் ஒளவை யாராக கடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை என் வாழ்க்கையிலேயே கான் பெற்ற மிகச் சிறந்த பேருகக் கருதுகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/57&oldid=1322589" இலிருந்து மீள்விக்கப்பட்டது