பக்கம்:நாடகக் கலை 1.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை அனுபவ ஞானம்' என்பது எளிதிற் பெற இயலாத அரும்பெரும் சொத்தாகும். இதனை. ஒரு துறையில் ஒருவர் பெற்றிருக்கிருர் என்ருல், அதற்குள் அவர் முதுமையையும் அட்ைந்திருப்பார். அதனுற்ருன், மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்' என்ற பொன்மொழி தோன்றியது. நாடகக் கலைத் துறையில் அவ்வை தி. க. சண்முகம் அனு பவ ஞானத்தை முழுமையாகப் பெற்றுள்ளார். ஆறு வயதி லேயே நாடக மேடையில் நடிக்கத் தொடங்கி, இன்றுள்ள ஐம்பத்தாறு வயதுவரை தொடர்ந்து அரை நூற்ருண்டுக் காலமாக நடித்து வருகின்ருர், கலைஞர் தி. க. சண்முகத் திற்கு நடிப்புக்கலை தந்தையிடமிருந்து பெற்ற பிதிரார்ஜித சொத்து. அவர் மட்டுமின்றி. அவருடைய மூத்தண்ணுக் களான தி. க. சங்கரன், தி. க. முத்துசாமி ஆகியோரும் இளவலான தி. க. பகவதியும் நடிகர்களாவர். மளுேன் மணியம்’ என்னும் உயர்ந்த நாடக நூலை இயற்றிய பேராசிரியர் சுந்தரம் பிள்ளை தி. க. சண்முகத்திற்கு மாமனர் முறையாவார். ஆம்; கலைஞர் தி. க. சண்முகம் இரண்டு தலைமுறை களாக நாடகக் கலைத் துறையில் ஈடுபட்டுள்ள குடும்பத்தைச் சார்ந்தவராதலால், அத்துறையில் அவர் பரிபூரண அனுபவம் பெற முடிந்திருக்கிறது. நடிப்பதனை வெறும் தொழிலாக மட்டுமல்லாமல் பெருந்தொண்டாகவும் கருதும் பண்பினை கலைஞர் சண்முகம் சகோதரர்களிடம் காணலாம். கலைஞர் தி. க. சண்முகம், நாடகக் கலையில் பெற்றுள்ள திறமையை மெச்சியும், அக்கலையின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றி வந்துள்ள தொண்டினைப் பாராட்டியும் மாநில சங்கீத நாடக சங்கமும், மத்திய சங்கீத நாடக அகாதெமியும் அவருக்குப் பரிசுகள் வழங்கியுள்ளன. அந்த இரு சங்கங்களில் அங்கம் வகிக்கும் பெருமையையும் அவர் பெற்றிருக்கிரு.ர். இத்தகு சிறப்புகளையெல்லாம் பெற்ற ஒரு நடிகர் 'நாடகக்கலை பற்றி நூல் எழுதுகிருரென்ருல, அது முழுமை பெற்றதாக, தமிழ் இலக்கியக் களஞ்சியத்திற்கு ஒரு புது வர வாக இருககு மென்பதில் ஐயமில்லையல்லவா? நாடகக் கலையின் ஒரு நூற்ருண்டு வரலாருக அமைந் துள்ளது இந் நூல். கலைஞர் சண்முகம் வரலாற்று ஆசிரிய ரல்லர். ஆயினும் ஒரு வரலாற்று ஆசிரியருக்கு இருக்க வேண் டிய விவேகமும், விசாலமான மனமும், விருப்பு வெறுப்பற்று விமர்சிக்கும் பண்பும், சுவையற்றதையும் சுவையுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/6&oldid=1322535" இலிருந்து மீள்விக்கப்பட்டது