பக்கம்:நாடகக் கலை 1.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 59 பல புதிய நாடகங்களை கடத்தினர். கலைஞர் திரு. மு. கருணுகிதி எழுதிய மந்திரி குமாரி காடகமும் திரு. ஏ. கே. வேலனின் குருவளி என்னும் காடகமும் இச் சபையில் அரங்கேறிப் புகழ்பெற்றன. சுதந்திரம் பெற்றபின்... 1947-ல் பாரதகாடு சுதந்திரம் பெற்றபின் முதல் வரலாற்று நாடகமாகத் திரு. ரா. வேங்கடாசலம் எழுதிய இமயத்தில் காம் என்னும் காடகத்தைக் கோவை யில எங்கள் சபை அரங்கேற்றியது. இது சிலப்பதி காரம் வஞ்சிக்காண்டத்தை அடிப்படையாகக் கொண்ட வீர உணர்ச்சி மிக்க நாடகம். இதைத் தொடர்ந்து திரு. காரண துரைக்கண்ணன் எழுதிய உயிரோவியம் அரங்கேறியது. இந் நாடகம் தமிழ்ச் சுவையும் ககைச் சுவையும் விரவிய உணர்ச்சிச் சித்திரம். இதற்குப் பின் காங்கள் அரங்கேற்றிய மனிதன் என்னும் நாடகம் சமுதாய நாடகங்களில் ஒருபுரட்சியை உண்டுபண்ணி, ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்றது. மனுஷ்யன் என்னும் மலையாள நாடகத் தைத் தழுவித் திருவாளர்கள் பா. ஆதிமூலம், கா. சோமசுந்தரம் ஆகியோர் எழுதிய நாடகம் இது. அடுத்ததாக எங்கள் குழுவில் உருவான காடகம் திரு. அகிலன் எழுதிய புயல். இந் நாடகம் காங்கள் கடத்திய தமிழ் நாடகப் போட்டியில் பரிசு பெற்ற காடகங்களுள் ஒன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/61&oldid=1322594" இலிருந்து மீள்விக்கப்பட்டது