பக்கம்:நாடகக் கலை 1.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 நாடகக் கலை கடைபெறுகின்றன. இதை இரண்டரை மணி நேர மாகக் குறைக்க முயன்று வருகிருேம். மேடையின் எதிர்காலம் தமிழ் நாடக மேடைக்கு மகத்தான எதிர்காலம் இருக்கிறது. நல்ல முறையில் பயிற்சி பெற்ற எழுத் தாளர்கள் முன் வந்து நாடகங்களை ஆக்கித் தமிழ் அன்னையை அலங்கரிக்கவேண்டும். இன்று தமிழ்த் திரைப்படவுலகில் இருந்து வரும் கடிகர்கள் பெரும்பாலும் பாலர் நாடக சபைகளிலிருந்து. தோன்றியவர்கள். நாடக உலகம் அழிந்திருந்தால சினிமா உலகுக்கு நடிகர்களே கிடைத்திருக்க மாட் டார்கள். இன்னும் நாடக நடன மேடைகளே சினிமா வுக்கு கடிக நடிகையரை உற்பத்தி செய்யும் நிலையங். களாக இருந்துவருகின்றன. இந்த நாடகப் பணியில் இனிப் பல்கலைக கழ. கங்கள், கல்லூரிகள் பெரும்பங்கு கொள்ளவேண்டும். அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தில் நாடகக் கல்வி சில ஆண்டுகள் நடைபெற்றதாகவும், இப்போதுநடைபெறு வதில்லை யென்றும் அறிகிறேன். மீண்டும் அது தொடர்ந்து நடைபெறுவதற்கு ஆவனவற்றைச் செய்யு மாறு மதிப்புக்குரிய செட்டிகாட்டரசர் அவர்களையும், துணைவேந்தர் அவர்களையும் பணிவன்புடன் கேட்டுக் கொள்ளுகிறேன். சென்னைப் பல்கலைக் கழகத்தில் காடகக் கலவி தொடங்குவதாகத் துணைவேந்தர் அவர்கள் ஒப்புக்கொண்டிருக்கிருர்கள் அதுவும் விரை வில் கடைபெற வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன். வாழ்க, வளர்க, காடகக் கலை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/68&oldid=1322601" இலிருந்து மீள்விக்கப்பட்டது