பக்கம்:நாடகக் கலை 1.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிப்புக் கலை 77 சோகம், சிரிப்பு, வெறுப்பு எல்லாம் குரலில் தெரியும். கண்கள் மாத்திரம் திருதிருவென்று விழித்தபடியே யிருக்கும். என்ன செய்வது? அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்’ என்றர் வள்ளுவர் பெருமான். எண்சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்; அதில் முக்கியஉறுப்பு கண். கடிப்பில் உயிர் வேண்டுமா? பாவம் கண்களில் தெரிய வேண்டும். கான் முன்பு சொன்னபடி கண்களும் பேச வேண்டும். விருப்பையும் வெறுப்பையும் கண்களே காட்டிவிடும். பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும்’ என்று வள்ளுவர் பெருந்தகை எவ்வளவு அருமையாகச் சொல்லியிருக்கிருர். அவர் எதைத்தான் சொல்லவில்லை? கண்களில் பாவம் காட்டாமல் கடிப்பது மகாபாவம். அந்த கடிகனைப் பார்க்கச் சபையோருக்கும் பாவமாய்த் தானிருக்கும். கடிகருக்கு அழகுணர்வு வேண்டும் நாடக கடிகன் தன் மெய்ப்பாட்டு உணர்ச்சிகளை வெளிப்படுத்தப் பயிலும்பொழுது முக்கியமான ஒன்றை கினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது எந்தச் சுவையை அல்லது பாவத்தைக் காண்பித்தாலும் மேடையில் அந்த பாவம் அழகாக வெளிப்படவேண்டும். அழும்போதும் அழகாக அழப் பயில வேண்டும். கோபம் கொண்டாலும் அழகாகக் கோபப்பட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/78&oldid=1322611" இலிருந்து மீள்விக்கப்பட்டது