பக்கம்:நாடகக் கலை 1.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 காடகக் கலை வேண்டும். எந்த வகையிலும் தன் முகத்தை விகாரப் படுத்திக் கொள்ளக் கூடாது கடிகன். சிரிப்பும் அழுகையும் சில பேர் சிரித்தால் அவர்கள் முகம் அழுவது போல் இருக்கும்; அழுதால் சிரிப்பதுபோல் இருக்கும். இவற்றையெல்லாம் கண்ணுடியின் முன் கின்று கடித்துப் பார்த்துத் திருத்திக்கொள்ள வேண்டும். 'ஒளவையார் நாடகத்தின்போது ஏற்பட்ட ஒரு நிகழ்ச் சியை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். ஒளவையாரில் ஒரு காட்சி, ஒளவையார் மழையில் கனைந்து குளிர் பொறுக்க முடியாது வருகிருர். அந்த இடத்தில் வள்ளல் பாரியின் மகளிரான அங்கவையும் சங்கவையும் அவரிடம் பரிவுகாட்டி, நனைந்த உடையை மாற்றி நீலச்சிற்ருடையைக் கொடுத்து உதவுகிருர்கள்; அன்பு காட்டி அமுதுாட்டுகிருர்கள். ஒளவையார் வறுமை கிலையிலிருந்த வள்ளலின் மகளிரைப் பாரி மகளிர் என அறிந்ததும், பாரியின் மரணச் செய்தியை யும் அவர்களின் கதியற்ற கிலையையும் கேட்டுப் பரிவு காட்டுகிருர். இந்தக் காட்சியில் அங்கவையாக எங்கள் குழுவில் கடித்த பெண், உண்மையிலேயே கன்ருக கடிக்கக் கூடி யவள். ஆனல் ஒரே ஒரு குறை. அவள் அழுவது மாத் திரம் சிரிப்பதுபோல இருக்கும். அங்கவை தன் நிலையைச் சொல்லி அழும்போது அவள் சிரித்ததாகவே சடிையோரில் பலர் எண்ணிக் கொண்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/79&oldid=1322612" இலிருந்து மீள்விக்கப்பட்டது