பக்கம்:நாடகக் கலை 1.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 காடகக் கலை என்ருள். கான் ராஜாவாக கின்றேன். என்ன சொல்வது? நான் வருகிறேன்’ என்று சொன்னல், உடனே, "வருகிறேன் என்று சொல்லிவிட்டுப் போகிருயே’ என்று சொல்லலாம். அவள் அவசரத்தில் 'கான் போய் வருகிறேன்’ என்ருள். நான் என்ன செய்வது? போய் வா' என்று ஆசி கூறி வழி யனுப்பினேன். அழுத்தமும் மென்மையும் தெளிவும் வார்த்தைகளைத் தெளிவாகவும், அழுத்தமாகவும் பேசுவதற்கு உதாரணமாக மற்ருெரு காட்சி; தமிழ்ச் செல்வம் காடகத்தில் காதல்’ என்னும் பகுதி, நல்ல சுவையான காட்சி. வார்த்தைகளிலேயே பன்னிப் பன்னிப் பேசுகிருள் காதலி. அந்த உரையாடலைப் பாருங்கள்...... தலைவன் : ஆருயிரே, என்மீது வீணுகக் குற்றம் சொல்லாதே. நான் எந்தப் பெண்ணையும் கண் னெடுத்தும் பார்த்ததில்லை. பிரிந்தது முதல் இது வரை உன்னையே கினைத்துக் கொண்டு ஓடோடி வந்திருக் கிறேன் கண்ணே. தலைவி : என்ன! என்ன! என்ஆன கினைத்துக் கொண்டு வந்தீர்களா? தலைவன் : என்ன இது! மீண்டும் அழுகிருயே? தலைவி : என்னை கினைத்தேன்' என்ருல் என்ன பொருள்? வினவு என்பது எப்பொழுது வரும்? மறந்த பிறகு தானே? நீங்கள் என்ஜன மறந்துவிடுவீர்கள்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/83&oldid=1322620" இலிருந்து மீள்விக்கப்பட்டது