பக்கம்:நாடகக் கலை 1.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 காடகக் கலை நடிப்பின் தத்துவ விளக்கம் மனித உடலில் ஆத்மா எவ்வாறு ஊடுருவி நிற்கிறதோ, அவ்வாறே பாத்திரத்தோடு கடிகன் ஊடுருவி கிற்கவேண்டும். நடிப்புக்கலைக்குரிய தத்துவ விளககம் இதுதான். மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலையும் அவனது ஆத்மா கண்காணித்துக கொண் டிருக்கிறது. எந்தச் சமயத்திலும் மனிதனுடைய உள்ளுணர்வு அவனுக்கு நன்மை தீமைகளை எடுத்துக் கூறத் தயங்குவதில்லை. எப்போதும் அக்தராத்மா அவனுக்கு அறிவுரை கூறி உடனிருந்து திருத்திக் கொண்டே யிருப்பதால்தான் மனிதன் மனிதனுக வளர்கிருன். நடிகன் நல்ல கடிகளுக வளர்ச்சி பெறுவதற்கும் இந்த உள்ளுணர்வு-அந்தராத்மா-துணை செய்ய வேணடும். வெளிப்புற உணர்ச்சிகள் பாத்திரத்தோடு ஒன்றிக்கிடந்தாலும், அந்தப் பாத்திரத்தைக் கண் காணிக்கும் கருவியாக கடிகனின் உள்ளுணர்வு இயங்கிக்கொண்டே இருக்கவேண்டும். அவ்வாறு பாத்திரத்திற்கு உணர்ச்சிகளை அடிமைப்படுத்தி விடாமல் தனது உள்ளுணர்வைத் தெளிவாக வைத்துக் கொள்பவனல்தான் கடிப்பில் வெற்றி காண முடியும். அவ்வைக்கு அபாயம் கான் சென்ற பதினேழு ஆண்டுகளாக அவ்வை யாராக கடித்து வருகிறேன். என் நடிப்பிலே அவ்வை நடிப்புச் சிறந்தது எனப் பெரும புலவர்களும், ரசிகர் களும் பாராட்டுகிறர்கள். 1944-ல் ஈரோட்டில் முதலா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/95&oldid=1322633" இலிருந்து மீள்விக்கப்பட்டது