பக்கம்:நாடகக் கலை 1.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 நாடகக் கலை யேறுபவர்கள் எல்லாருக்கும் எளிதில் வந்து விடாது. நன்கு பயிற்சி பெற்றுப் பல ஆண்டுகள் நடித்து அனுபவ முத்திரை பெற்ற நடிகர்களிடமே இந்த உயர்ந்த நடிப்பைக் காணலாம். நடிப்பு என்றும் நடிப் பாகவே இருக்க வேண்டும். அது உண்மையாகி விடக்கூடாது. கான் பல ஆண்டுகளாகப் பெற்ற நாடக மேடை அனுபவம், இந்த அறிவுரையைத்தான் கூறு கிறது. தோற்றப் பொலிவு அடுத்தது தோற்றப் பொலிவு. நடிப்புத் திறமை, குரல் வளம், பேச்சுத் தெளிவு எல்லாம் இருக்கலாம். ஆல்ை, தோற்றம் அந்தப் பாத்திரத்திற்குப் பொருத்தமாக இல்லாவிட்டால் வெற்றி பெற இயலாது. ஒப்பனையின் மூலம், அதாவது மேக்கப்பின் மூலம் ஒரளவுக்குத்தான் தோற்ற மாறுபாடு செய்ய முடியும். கூடிய வரையில் பாத்திரத் திறகேற்ற தோற்றமிருக் கிறதாவென்று பார்த்துத் தேர்வு செய்வது கல்லது. என் தம்பி பகவதி, இராஜராஜ சோழ கை கடிக் கிருர், நான் அவருடைய மகன் இராஜேந்திர சோழனுக கடிக்கிறேன். அவரைவிட கான் ஐக் து வயது மூத்தவன். ஆல்ை, அவரது தோற்றம் எடுப்பாக இருக்கிற து; குரலும் கம பீரமாக இருக்கிற து; உயர மும் என்னை விட அதிகம். இரத்த பாசம் நாடகத்திலே தம்பி பகவதி எனக்கு அண்ணன்; நான் தம்பி என்ன செய்வது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/99&oldid=1322638" இலிருந்து மீள்விக்கப்பட்டது