பக்கம்:நாடகக் கலை 2.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

வகைப்பட்ட குணப்பண்புடைய மக்களைப் பார்த்துப் பழக வேண்டும். -

ஒரு டாக்டராக நடிக்க வேண்டுமென்ருல் பல டாக்டர்கள் தொழில் செய்வதை அணுகிப் பார்க்க வேண்டும். அவர் ஸ்டெதெஸ் கோப்பை எப்படி யெடுக்கிருர்? நோயாளிகளை ஆராயும்போது அவ. ருடைய முகம் எப்படியிருக்கிறது? என்றெல்லாம்.

துணுக்கமாகப் பார்க்க வேண்டும்.

கற்பனைத்திறன்.உண்மையின் உணர்வு

கற்பசைக்தி நடிகனுக்கு மிகவும் அவசியம். சில நேரங்களில் பால் குடிக்க வேண்டிய காட்சியில் தண் னிர்தான் எங்களுக்குக் கிடைக்கும். என்ன செய்வது: தண்ணிரைப் பாலாக நினைத்துக் குடிப்போம். சமுதாய நாடகங்களில் தேநீர் குடிக்கும் காட்சிகள் வரும். நாங்கள் ஆவலோடு தேநீரையே எதிர்பார்த்திருப் போம். அந்தப் பொறுப்புக்குரியவர் சில நேரங்களில் தமது கடமையைச் செய்யத் தவறிவிடுவார். உள்ளே யிருந்து அழகாக வெறும் டம்ளர்கள் வந்து சேரும். அந்த சமயத்தில் நாங்கள் சூடான தேநீர் அருந்துவது போல சாமர்த்தியமாக நடித்துவிடுவோம்.

நம்ப முடியாத பொய்யும் நடிகனுக்கு உண்மை யாகப்பட வேண்டும். அங்கேதான் அற்புதமான கலை பிறக்கிறது; நடிகனின் கற்பனை விரிவடைகிறது. இந்நிலையை உண்மையின் உணர்வு என்று கூறலாம்.

பேசாத நடிப்பு

'நாடகமேடையில் பல சிறந்த கட்டங்கள் நடி கர்கள் யாருமே பேசாதபோதுதான் ஏற்படுகின்றன’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/102&oldid=1322467" இலிருந்து மீள்விக்கப்பட்டது