பக்கம்:நாடகக் கலை 2.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

யார்' என்று பார்ப்பதும், தன் தாய் என்று உணர்ந் ததும், அவன் ஆவேசமெல்லாம் அடங்கிப்போய் தாய்க்குப் பணிந்த மகளுக நிற்பதும் சில விநாடிகள் பேச்சு எதுவுமில்லாத பகுதிதான். முழுதும் நடிப்புக் குரிய அந்தக் கட்டம் மனேகரன் நாடகத்திலேயே ஒரு சிறந்த பகுதியென்று சொல்லலாம்.

இப்படிப் பேசாத பகுதிகள் எத்தனையோ நாடகங் களில் வருகின்றன. இவைபோன்ற கட்டங்களில் நடிகன் மிகத் திறமையாக நடிக்கவேண்டும்.

காட்சியில் கவனம் வேண்டும்

மற்ருெரு முக்கியமான குறிப்பு, அரங்கில் பல நடிகர்கள் இருக்கலாம். அவர்களில் ஒரு சிலருக்குத் தான் வார்த்தைகள் இருக்கும். மற்றவர்கள் எல்லாம் என்ன செய்வது? நமக்குத்தான் ஒன்றுமில்லையே' என்று சும்மா நின்று கொண்டிருப்பதா?.........

மனேகரன் நாடகத்தில் சங்கிலியறுக்கும் காட்சி; புருஷோத்தமன், பத்மாவதி, வசந்தசேனை, ராஜப் பிரியன், சத்தியசீலர், மனேகரன் ஆகியோரைத் தவிர மற்றும் அமைச்சர்கள், காவலர்கள், எடுபிடிகள் முதலிய பலர் மேடையில் நிறைந்திருப்பது வழக்கம். மனேகரனும் பத்மாவதியும் உரையாடிக் கொண் டிருக்கும்போது இவர்களெல்லாம் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தால் காட்சியில் கவர்ச்சியிராது. அவரவர் பாத்திரப் பண்புக்கேற்றபடி ஒவ்வொருவரும் முகத்தில்

உணர்ச்சியைக் காட்டவேண்டும்.

குறும்பு நடிகர்

ஏதாவது மிகையாக நடித்து சபையோரின் கவனத்தைத் தன் பக்கம் இழுத்துவிடக்கூடாது; எப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/104&oldid=1322469" இலிருந்து மீள்விக்கப்பட்டது