பக்கம்:நாடகக் கலை 2.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

தடித்தாலும் அப்போதும் ஏதேனும் குறைகள் அவ. னுக்குத் தோன்றிக் கொண்டே யிருக்கும். அவன் ஒரு போதும் அகந்தை கொள்ளுவதில்லை.

நடிப்புக்கலை, நடிகன் தானே ரசிக்கும் கலையல்ல; மற்றவர்களால் ரசிக்கப்படும் கலை. ஆகையால் நடிப்புக் கலையின் வளர்ச்சிக்கு ரசிகப்பெரு மக்களின் ஒத்து ழைப்பு வேண்டும்.

நடிப்புக் கலையின் சிறப்பு

இசைக்கலைஞன் ஒருவன் இல்லத்தில் தனித் திருந்து இசைபாடி இன்புறுவான். மெய்மறந்து இசைச்சுவையோடு அவன் ஒன்றிவிடவும் முடியும். ஓவியக்கலைஞன் இதற்கு விலக்கன்று. தனது சுவைக் காகவே, தனது உள்ளுணர்ச்சியின் அமைதிக்காகவே கூட ஓவியம் தீட்டத் தொடங்கிவிடுவான்; உணர் விழந்து நிற்பான். சிற்பக் கலைஞனும் இப்படித்தான். ஆளுல் நடிப்புக்கலை தனித்தன்மை வாய்ந்தது நடிகன் தனித்திருந்து நடித்து இன்புற இயலாது. எதிரே வீற்றிருக்கும் ரசிகர் கூட்டம் அவ்வப்போது காட்டும் மெய்ப்பாட்டுணர்ச்சிகள் மேடையில் நடிக்கும் நடிகனின் உணர்ச்சிகளோடு ஒருமைப்படும் போது தான் நடிப்புக்கலை அதன் உச்சநிலைக்கு வருகிறது. இது அனுபவத்தின் வாயிலாக நான் கண்ட உண்மை.

நடிப்பும் படைப்பும் ஒன்றே

நடிப்புக்கலைக்கும் வேறு கலைகளுக்கும் மற்ருெரு குறிப்பான மாறுபாடு இருக்கிறது. ஓர் ஓவியன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/108&oldid=1322475" இலிருந்து மீள்விக்கப்பட்டது