பக்கம்:நாடகக் கலை 2.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103

தன் கலையைச் செய்து முடித்தவுடன் அந்தக் கலை வேருகவும் ஓவியம் வேருகவும் காட்சி யளிக்க முடிகிறது. அதேபோன்று சிற்பக் கலைஞனும் தான் செய்த சிற்பத்தையும் தன்னையும் வெவ்வேருகப் பிரித்துக் கொள்ள முடிகிறது. காவியம் புனையும் கலைஞனும் தன்னையும் தான் படைத்த காவியத் தையும் பிரித்துக் கொள்ள முடிகிறது. நடிகனின் நிலை இவற்றிற்கு முற்றிலும் மாறுபட்டது. நடிகன் வேருகவும், அவன் படைப்பு வேருகவும் இருக்க முடிவதில்லை. நடிகன் படைக்கும் பாத்திரம் நடிகனிடத். திலேயே அடங்கிக் கிடக்கிறது. நடிகனும் அவனே, பாத்திரமும் அவனே. இந்தச் சிறப்பை ஒவ்வொரு வரும் உய்த்துணரவேண்டும். அது நடிப்புக் கலைக்கே, உரிய தனிச் சிறப்பாகும்.

ரசிகரின் ஆதரவு

மக்களின் ரசிப்பு ஒன்றுதான் ந டி க னு க் கு. உற்சாகத்தைத் தரக்கூடியது. தீபாவளி, பொங்கல், வருடப்பிறப்பு முதலிய மகிழ்ச்சி தரும் நாட்களிலே கூட நடிகன் தன் மனைவி மக்களோடு இன்புறுவ: தில்லை. அவன் இன்பம் அனுபவிக்கத் தெரியாதவன் அல்லன். அவனுக்கு அதற்கெல்லாம் நேரமில்லை. அந்த நல்ல நாட்களிலே நடிகன் மக்களை மகிழ்விக்க வந்துவிடுகிருன்.

வாழ்வின் துன்பங்களையெல்லாம் மறந்துவிட்டு மக்களை மகிழ்விக்க வரும் நடிகனுக்கு மக்களின் ரசிப்பும் ஆதரவும் இல்லாவிட்டால் இன்பத்திற்கு இடமேது. அவன் நடிப்பில்தானே இன்பம் காணு கிருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/109&oldid=1322476" இலிருந்து மீள்விக்கப்பட்டது