பக்கம்:நாடகக் கலை 2.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

திரு. டி. கே. சண்முகம் அவர்கள் தமிழ்நாட்டில் தலைசிறந்த நடிகர்; இலக்கிய அறிவும் பெற்றவா எனவே, இலக்கிய ஆராய்ச்சிக் கண்கொண்டும் நாடக அனுபவக் கண்கொண்டும் வரலாற்றுக் கண்கொண்டும் தமிழ் நாடகத்தைக் காணும் வாய்ப்பு அவருக்கு உண்டு. ஆதலால், நாடகக் கலையினைப் பற்றிச் சென்ற ஆண்டே சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த அண்ணுமலைப் பல்கலைக் கழகம் அவரை அழைத் திருந்தது. உடல் நலம் இன்மையால் அந்த ஆண்டே அவர் வரமுடியாமல் போய்விட்டது. காலம் தாழ்த்த தில் ஆழ்ந்து எண்ணவும், பரந்து ஆராயவும் இடம் ஏற்பட்டது எனலாம். அவர் இந்த ஆண்டு அக்டோபர் திங்கள் 27, 28, 29-ஆம் நாட்களில் திரு. சீநிவாச சாத்திரியார் மண்டபத்தில் மூன்று சொற்பொழிவுகள் ஆற்றினர். எல்லோரும் அச்சொற்பொழிவுகளில் ஈடு பட்டுப் பாராட்டினர். தமிழ் இலக்கிய வரலாற்றுக்குப் பெரிதும் உதவும் என்ற கருத்தில் இச்சொற்பொழிவு களைப் பல்கலைக் கழகம் வெளியிடுகிறது. இத்தகைய நூல் தமிழில் இல்லாத குறையை இவ்வெளியீடு போக்கும் என்பதில் ஐயமில்லை.

வாழ்க சண்முகளுர் வாழ்க நாடகம்! வாழ்க தமிழ்!

ੱਗ &ు 鬱 弱 彎 Ś'), தெ. பொ. மீனுட்சிசுந்தரன், 1 4–1 2–1 &59. தமிழ் கலைத் துறைத் தலைவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/11&oldid=1322366" இலிருந்து மீள்விக்கப்பட்டது