உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாடகக் கலை 2.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

உடல் நலம்

ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் எப்பொழுதோ சில வேளைகளில் ஏற்படக்கூடிய கோபம், சோகம், வீரம் முதலிய உணர்ச்சிகளையெல்லாம் சில மணி நேரங்களில் செய்து காட்டுகிருன் நடிகன். அந்த உணர்ச்சிகள் நடிகனுக்கு எவ்வளவோ நலிவை உண்டாக்கும். அந்த நலிவு ஏற்படாமலிருக்க வேண்டுமானுல் நடிகன் நல்ல உடல் கம்ை பெற்ற வகை இருக்கவேண்டும்.

நடிப்புக்கலைக்குரிய தகுதிகளில் உடல் நலத் தையும் ஒன்ருக, அதிலும் முதலாவதாக, முன்னரே குறிப்பிட்டேன். ஒவ்வொரு நடிகனும் ஒரு குறைந்த அளவுக்காவது உடற்பயிற்சி தினமும் செய்ய வேண்டும்.

உடற்பயிற்சியின் மூலம் மாணவர்களாகிய நீங்கள் எல்லோரும் நல்ல உடல் நலம்பெற்று, நடிப்புக்கலை பயின்று நடிக நட்சத்திரங்களாகி, நமது நாட்டிற்கும், மொழிக்கும் பல்லாண்டு காலம் பணிபுரிந்து எல்லா நலன்களும் பெற்று இனிது வாழ வேண்டுமென இறைவனை வேண்டுகிறேன.

வாழ்க! வளர்க நடிப்புக்கலை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/110&oldid=1322477" இலிருந்து மீள்விக்கப்பட்டது