பக்கம்:நாடகக் கலை 2.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

வாழ்வுக்காகவே கல்

மனித சமுதாயத்தினிடம் பற்றுக் கொண்ட ரசிகர்கள் கலைஞர்கள், மனித வாழ்வு வளம்பெற வேண்டுமென எண்ணும் நல்லவர்கள் கலை, சிறப்பாக நாடகக் கலை வாழ்வுக்கு வளர்ச்சி தரும் முறையிலே தான் வளர வேண்டுமென விரும்புவார்கள்.

நமது நாமக்கல் கவிஞர் திரு. இராமலிங்கம் பிள்ளை அவர்கள் கலையைப் பற்றிக் குறிப்பிடுகிருர்கள் பாருங்கள் :

  • கலையென்ருல் உணர்ச்சிகளைக்

கவர வேண்டும் களிப்பூட்டி அறிவினைப் போய்க்

கவ்வ வேண்டும். ' ஆம் ; கலை ரசிகனுக்குக் களிப்பூட்ட வேண்டும். அவன் உணர்ச்சிகளைக் கவரும் முறையில் இருக்கவேண்டும். அதற்குமேல் அவனது அறிவைப் போய்த் தட்டி யெழுப்பவும் வேண்டும் என்று சொல்லுகிருர் கவிஞர்.

மகாகவி பாரதி சொல்வதைப் பாருங்கள் :

வெள்ளத்தின் பெருக்கைப் போல்

கலப்பெருக்கும் கவிப்பெருக்கும்

மேவுமாயின் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும்

குருடரெலாம் விழிபெற்றுப்

பதவி கொள்வார் 1’

உண்மைதான்; கலைப்பெருக்கினல் மனித குலத்தின் அறிவுக்கண் திறக்கிறது. அறியாமைப் படுகுழியில் விழுந்து கிடக்கும் மக்களுக்கு அது வாழ்வளிக்கிறது. சமுதாயத்தின் மனவிருளை நீக்கி அறிவொளி பரப்பி நல்வழி காட்டுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/112&oldid=1322480" இலிருந்து மீள்விக்கப்பட்டது