பக்கம்:நாடகக் கலை 2.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107

நல்ல நாடகங்களின் மூலம் மக்கள் நல்லறிவைப் பெறுகிருர்கள். வாழ்க்கையின் சிக்கல்களைப் புரிந்து கொள்கிருர்கள். அதன் மூலம் தங்கள் வாழ்க்கையை நடத்திச் செல்வதற்குரிய துணிவைப் பெறுகிருர்கள்.

பல்வேறு வகைப்பட்ட நாடகக் கதை நிகழ்ச்சி களின் மூலம் வாழ்க்கை உண்மைகள் மக்களுக்கு எளிதாக எடுத்துக் காட்டப்படுகின்றன. மனிதன் மனிதனுக வாழ முயல்கிருன். தவறு நேரும் சமயங் களில் நாடகக் காட்சிகள் அவன் நினைவுக்கு வரு கின்றன. அவை அவனுக்குச் சரியான வழியைக் காட்டித் திருத்துகின்றன.

கல்யும் கல்வியும்

கல்வியறிவோடு இந்தக் கலையறிவும் சேரும் போது மனிதன் நிறைவு பெறுகிருன். தான் கற்ற கல்வியால் பெற்ற அறிவின் வழியில் நிற்பதற்கு நாடகக் கலையின் மூலம் அனுபவப் பேருண்மைகளையும் அவன் தெரிந்து கொள்ளுகிருன்.

கல்வி அறிவை வளர்க்கின்றது. இந்த நாடகக் கலை பல அனுபவங்களைக் காட்சிப்படுத்திக் காட்டி உணர்த்துகின்றது. அறிவு எப்போதும் உண்மையை உணர்த்தும். ஆனால், மனிதனுடைய மனம் உணர்ச்சி நிறைந்தது. அந்த உணர்ச்சி வசப்பட்ட மனம் உண்மையை நாடிச் செல்வதற்கு அனுபவமே துணை செய்யும். உணர்ச்சிகளுக்கு அறிவைப் பறி கொடுத்து விடாமல் ஒரு நிலைப்படுத்தும் சக்தி அனுபவம். இந்த அனுபவத்தை நாடகக் கலையால் நாம் பெறுகிருேம்.

நாடகத்தின் பயன்

திரு. பரிதிமாற்கலைஞன் அவர்கள் தமது நாடக இயல் ' என்னும் நூலில் நாடகத்தின் பயனைப்பற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/113&oldid=1322481" இலிருந்து மீள்விக்கப்பட்டது