பக்கம்:நாடகக் கலை 2.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறர். இந்த நாடக

இலக்கண விளக்கத்திற்கு அறம்' என்றே தலைப்

பிட்டிருக்கிருர்.

  • நல்லொழுக் கத்தை நனிவிரித் துரைத்தலு

நல்லொழுக் கமுளார் நன்மை யெய்தலுந் தியொழுக் கத்தின் தீமையைச் செப்பலுந் தியொழுக் கமுளார் தீதுற் றழிதலுந் தியர்தத் தீமையைச் சிறப்பித் துரைப்பினுஞ் செம்மையோ ரத8னச் சினந்துரை யாடலும் அரியநாற் பொருளினுள் அறத்தின் பாலவாம்.'

நல்ல ஒழுக்க நெறிகளை விரிவாக எடுத்துக் காட்ட வேண்டும்; ஒழுக்கத்தில் உயர்ந்தவர்கள் கதையின் முடிவில் நன்மை பெறவேண்டும்; தீய ஒழுக்கங் களால் விளையும் கேடுகளை எடுத்துக் கூற வேண்டும்; அத்தகைய தீயவர்களை அவர்கள் செய்யும் தீமையே அழித்துவிட வேண்டும்; தீயனவற்றைத் தீச்செயல் புரிவோர் எவ்வளவு சிறப்பாக எடுத்துச் சொன்னலும், நல்லவர்கள் அவற்றை வெறுத்து ஒதுக்குவதாக அமைய வேண்டும்; இதுவே அறம் என்று அழகாகக் கூறுகிருர் ஆசிரியர்.

இவ்வளவு விளக்கமாக நாடக இலக்கணம் கூறிய பிறகும் கூடக் கலை கலைக்காகவே' என்பதில் என்ன பொருளிருக்கிறது?

காணும் கல்

நாடகம் ஒரு மகத்தான சக்தி; அறிவையும் உள்ளுணர்ச்சியையும் கிளறிவிடக் கூடிய சக்தி. கண்,

காது, மனம் மூன்றையும் தன்பால் இழுத்து வைத்துக் கொள்ளும் ஒர் அற்புதக் கலை. காவியக் கலைகளில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/114&oldid=1322482" இலிருந்து மீள்விக்கப்பட்டது