பக்கம்:நாடகக் கலை 2.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109

நாடகம், பார்க்கும் கலேயாகக் கருதப் பெறுகிறது. அதனுல்தான் நாடகத்தைப்பற்றிக் குறிப்பிடும்போது அறிஞர்கள், நாடகம் அச்சில் அழகாக வந்து விடுவ தால் மட்டுமே வளர்ந்து விடாது; அரங்கிலும் ஆடிச் சிறப்புப் பெற வேண்டும் ' என்கிருர்கள்.

நாடகத்தில் இயல் இருக்கிறது, இசை இருக் விறது, மூன்ருவதாக நடிப்பும் இருக்கிறது. இவற்ருேடு கதை, வேடம், காட்சிகள் அனைத்தும் ஒன்று சேரும் போது இலட்சக்கணக்கான மக்களுக்குச் சுவைதரும் ஒன்ருக நாடகம் அமைந்து விடுகிறது.

நாம் இப்படியெல்லாம் சொல்லும்பொழுது 'கலை கலைக்காகவே” என்று சொல்லுபவர்களுக்குக் கோபம் வருகிறது. என்னையா பகலெல்லாம் அலு வலகங்களில் உழைத்துவிட்டு அலுப்போடு கலை நிகழ்ச்சிகளைப் பார்க்க வருகிருன் மனிதன். வந்த இடத்திலும் வாழ்க்கைத் தொல்லைகளைப் பற்றிப் பிரசாரமா? என்று கேட்கிருர்கள். உண்மைதான். நாடகம் அவர்கள் எண்ணுகிறபடி பொழுதுபோக்குக் கலையாக இருக்கலாம். ஆனல் நல்ல கலைஞர்கள், தாய்மைப் பண்புள்ள கலைஞர்கள், நாடகத்தை அதற் காக மட்டும் பயன்படுத்தமாட்டார்கள்.

கள் வெறியும் கலை வெறியும்

கள் வெறியால்கூட சில மணி நேரம் இன்பம் கிடைக்கிறது. கலையும் ஒரு வகை வெறிக்குச் சம மானதுதான். சில மணி நேர இன்பப் பொழுது போக்குக்காக மட்டும் இதைப் பயன்படுத்துவோ மாளுல் கள் வெறிக்கும் கலை வெறிக்கும் வித்தியாசம் இல்லாது போய்விடுமல்லவா? எனவே, பொழுது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/115&oldid=1322483" இலிருந்து மீள்விக்கப்பட்டது