பக்கம்:நாடகக் கலை 2.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

போக்கு என்ற போர்வையில் சில பல நல்ல உண்மை களைச் சொல்லுவதே நாடகத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். பொழுது போக்குக் கலையென்பது காக விளையாட்டு, காவடியாட்டம், சிலம்பக்கூத்து, கழைக் கூத்து, பொய்க்கால் குதிரையாட்டம், இன்னும் இவை போன்ற பல்வேறுபட்ட கலைகளாகும். இந்தக் கலைகளெல்லாம் தனி மனிதனின் பயிற்சித் திறமையை வெளிப்படுத்தும் கலைகள். இவற்றிலும்கூட ஏதேனும் ஒரு கருத்தை வைத்துக்கொண்டு பாடத் தொடங்கும் போது இவையும் பிரசாரக் கலைகளாகி விடுகின்றன. பொதுவாக எல்லாக் கலைகளுமே ஒன்று அறிவு வளர்ச்சி, அல்லது உடல் வளர்ச்சி இவற்றின் அடிப் படையிலே எழுந்தவைதாம்.

அறிவு வளர்ச்சிக் கலை

நோய் நொடி எதுவும் வராமல் உடம்பைப் பாதுகாப்பதற்காக நாம் உடற் பயிற்சி செய்கிருேம்; யோக ஆசனங்கள் போட்டுப் பழகுகிருேம். ஆனல், உடல் பயிற்சியிலும் ஆசனங்கள் போடுவதிலும் எல்லோருக்கும் உற்சாகம் இருப்பதில்லை அல்லவா? உடற்பயிற்சி நேரத்தில் உடம்பிற்குச் சரியில்லை” என்று எத்தனை பேர் ஒடி ஒளிகிருர்கள்! அதற்காகத் தான் பலவிதமான விளையாடல்களையும் நமது பெரிய வர்கள் ஏற்படுத்தி இருக்கிருர்கள். விளையாட்டு நேரம் வந்ததும் நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியோடு கலந்து கொள்ளுகிறீர்கள்? பலீன்சடுகுடு, நொண்டி, கிளித் தட்டு முதலிய பழங்கால விளையாடல்களும் இன்று நீங்கள் விரும்பும் கிரிக்கட், ஹாக்கி, டென்னிஸ், புட்பால் முதலிய பல்வேறு விளையாடல்களும் உடல் வளர்ச்சிக்காக ஏற்பட்டவைதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/116&oldid=1322487" இலிருந்து மீள்விக்கப்பட்டது