பக்கம்:நாடகக் கலை 2.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112.

வாழ்வையே உயர்த்துவது

1945-ல் எங்கள் அவ்வை நாடகத்தைத் திருச்சிராப்பள்ளியில் பார்த்துவிட்டுப்போன கல்கி' ஆசிரியர் திரு ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தமது பத்திரிகையில் விமர்சனம் எழுதினர்கள். அதில் ஒரு பகுதியை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்குமெனக் கருதுகிறேன்.

"இந்த நாடகத்தைப் பார்த்து வந்தபோதும் அதன் முடிவிலும் எனக்கு என்ன தோன்றியது என்ருல், நம் கையில் மட்டும் அதிகாரம் இருந்தால் இந்த நாடகக் கம்பெனியையும், இந்த ஒளவையார் நாடகத்தையும் உடனே நாட்டின் பொதுவுடைமை யாக ஆக்கிவிட வேண்டும் என்பதுதான். ஆம்; இந்த நாடகக்காரர்களை ஒரே இடத்தில் வெகு காலம் இருக்கவே அனுமதிக்கக் கூடாது. ஊர் ஊராகப் போய் ஒவ்வொரு மாதம் இருக்கச் செய்யவேண்டும்.

தமிழ் நாட்டிலுள்ள எல்லாக் குழந்தைகளும் இந்த நாடகத்தைப் பார்த்துவிட வேண்டும். ஒரு தடவை, இரண்டு தடவை, மூன்று தடவை பார்த்து விட வேண்டும். பள்ளிக்கூடத்தில் எத்தனை வருடம் படித்தாலும் அடைய முடியாத பயனை நம் குழந்தைகள் அடைந்து விடுவார்கள். பழந்தமிழ் நாட்டின் பண் பாடு எத்தகையது என்பதை அவர்கள் நன்ருக அறிந்துகொண்டு விடுவார்கள். இதைக்காட்டிலும் நமது குழந்தைகளுக்கு நாம் செய்யக்கூடிய நன்மை வேறு என்ன இருக்கிறது? அவ்வையார் நாடகம் பார்த்து அனுபவிக்க வேண்டிய கலைக்காட்சி மட்டு மல்ல; தமிழர்களின் வாழ்வையே உயர்த்தக்கூடிய நிர்மாணத் திட்டத்தைச் சேர்ந்தது.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/118&oldid=1322489" இலிருந்து மீள்விக்கப்பட்டது