பக்கம்:நாடகக் கலை 2.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113

இவ்வாறு திரு. ரா. கிருஷ்ணமூர்த்தி 1945-இல் எழுதினர்.

தமிழனின் ஆற்றலைக் கண்டேன்

1948-இல் சென்னையில் ஒளவையார் நாடகத் தைப பார்த்தபோது திரு. வி. கல்யாணசுந்தரஞர் அவர்கள் கூறியதாவது:

'அவ்வை நாடகம் தளர்ச்சியுற்றிருந்ந என் உள்ளத்தில் புதிய உணர்ச்சியையும் நம்பிக்கையையும் ஊட்டி விட்டது. இந் நாடகத்தின் மூலம் தமிழ்நாடு தலை நிமிர்ந்து நிற்கிறது. பல நூறு ஆண்டுகளுக்கு முன் தனியரசு செலுத்திய தமிழனின் ஆற்றலைக் கண்டு உள்ளம் பூரித்தேன். நாடகம் முழுவதிலும் நாட்டிற்கு இன்று வேண்டிய நல்லுரைகளே செம் பொருளாகக் கிடக்கின்றன." இவ்வாறு இன்னும் எத்தனை, எத்தனையோ அறிஞர் பெருமக்கள் அவ்வை நாடகத்தைப் பெருமிதத்தோடு வாழ்த்தி வரவேற்றிருக் கிருர்கள். இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது?

நல்லுரைகளை நல்ல நாடகத்தின் மூலம் சொல் லும்போது அவைகளை நல்லவர்கள், நாட்டின் நலனை விரும்புபவர்கள் எப்படியெல்லாம் வரவேற்பார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுகிருேம். இப்படிப் பயன் தரும் நாடகத்தை வெறும் பொழுதுபோக்குக் கலையாக எப்படிச் சொல்ல முடியும். கலை கலைக்காகவே என்று எப்படி வழிபாடு செய்ய முடியும்?

நாடகம் மகத்தான சக்தி

மக்களைச் செயல்படத் துண்டும் ஓர் அருமை யான சக்தி நம்மிடம் இருக்கிறது. அதைப் பயன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/119&oldid=1322490" இலிருந்து மீள்விக்கப்பட்டது