பக்கம்:நாடகக் கலை 2.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115

சுவையாக இருக்கலாம்; அது உடலுக்கு ஊறு செய் யாமல் இருக்க வேண்டாமா? அதையும் கவனிக்கிருே மல்லவா?

பசிக்காக உணவு என்ருலும் அந்த உணவு நாவிற்கு ருசியாக இருந்தாலும் சத்துள்ள உணவு தாளு என்பதையும் பார்க்கிருேமல்லவா? எந்தெந்தப் பொருட்களில் என்னென்ன வைட்டமின் சத்துக்கள் இருக்கின்றனவென்று ஆராய்கிருேமல்லவா? சில நேரங்களில் நாவிற்கு ருசியில்லாத உணவானுலும் உடல் வலிமைக்காகச் சாப்பிட வேண்டியதாகி விடு கின்றது. எனவே பசிக்காக உணவு அருந்தும் போதும் நாவிற்கு ருசி; உடலுக்கு வலிமை இவற்றை யெல்லாம் பார்த்துத்தான் அருந்த வேண்டியிருக் கிறது.

கலைஞனின் தாய்மை

கசப்பு மருந்தானுலும் நம் தாய்மார்கள் இனிப் போடு கலந்தோ, அல்லது வாழைப்பழத்திலே வைத்தோ கொடுத்து விடுகிருர்கள். அதேபோல் தான் கலை வாழ்வுக்காகவே என்று எண்ணுபவர்கள் நாடகத்திலே கலையழகு, கருத்தழகு, நல்ல பயன் இவையெல்லாம் இருக்க வேண்டுமென எண்ணு கிருர்கள்.

ஒரு தாய் எப்படித் தன் குழந்தைகளைப் பேணி வளர்த்து அறிவாளிகளாக்க வேண்டுமென்று நினைக் கிருளோ, அப்படியே ஒவ்வோர் உண்மைக் கலைஞனும் கருதுகிருன். தன்னுடைய கலாசக்தியால் உலகத்து மக்களை வாழ்விக்க வேண்டுமென நினைக்கிருன். அழகுக் கலையாகிய நாடகக் கலையிலே அறிவைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/121&oldid=1322492" இலிருந்து மீள்விக்கப்பட்டது