பக்கம்:நாடகக் கலை 2.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117

தாயத்தை உயர்த்துவதாக நினைத்துக்கொண்டு அறிவுப் பிரசாரம் என்ற பெயரால் அழிவுப் பிரசாரம், அபத்தப் பிரசாரம் முதலியவற்றைச் செய்வதால் யாருக்கும் நன்மையேற்படாது. அப்படிச் செய்யத் தொடங்கும்போது கலை மறைந்து நாடக மேடை வெறும் பிரசார மேடையாகி விடுகிறது. அதற்காக நம் கலையில் பிரசாரக் கருத்துக்களே கூடாது என்ற முடிவுக்கு வந்து கலை கலைக்காகவே' என்னும் கோஷ்டியில் சேர்ந்துவிட முயல்வது தவருகும்.

நாடகம் எழுதுகிற ஆசிரியரோ அல்லது நடிக்கிற நடிகரோ தமது கருத்தைக் கலையழகுடன் வெளிப் படுத்த முடியாததனால்தான், பெரும்பாலும் நிகழ்ச்சி களின் மூலம் எடுத்துக்காட்ட வேண்டிய கருத்துக்களை அப்படியே பிரசங்கம் செய்யத் தொடங்கி விடுகிருர் கள். நாடக மேடைக்கும் சொற்பொழிவு மேடைக் கும் வித்தியாசம் தெரியாமல் செய்துவிடுகிருர்கள். நாடகாசிரியர்கள் இந்த உண்மையைப் புரிந்து கொள்வது நல்லது.

நாடகம் நாடகமாக இருக்கவேண்டும்

நாடகத்தில் பிரசாரம் இருக்கலாம்; அது நாட்டி லுள்ள எந்தக் கட்சியின் கொள்கைப் பிரசாரமாகவும் இருக்கலாம். ஆனல் அரங்கிற்கு வரும்போது நாடகம் நாடகமாக இருக்கவேண்டும். நாடகத்திற் குரிய இலட்சணங்கள் எல்லாம் அதில் பொருந்தி யிருக்க வேண்டும். ஆசிரியன் தான் மக்களுக்குச் சொல்ல விரும்பும் கருத்துக்களுக்கு ஏற்றபடி கதை, பாத்திரங்கள், நிகழ்ச்சிகள் இவற்றையெல்லாம்: படைத்துக்கொள்ள வேண்டும். எண்ணங்களை இட மறிந்து பாத்திரத்தின் பண்பு கெடாமல் வெளியிட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/123&oldid=1322494" இலிருந்து மீள்விக்கப்பட்டது