பக்கம்:நாடகக் கலை 2.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129

கொண்டு உட்கார்ந்திருந்ததால் அவ்ன் வந்ததைக் கவனிக்கவில்லை. கணவன் வருவதைப் பார்த்ததும் பானுமதி எழுந்தாள். அந்தச் சமயம் அவள் தோல்வி யடையும் நேரம். எனவே, தோல்விக்குப் பயந்து ஓடுகிருளென்று எண்ணிய நான் அவள் சேலையைப் பற்றி இழுத்தேன். அவள் இடுப்பில் அணிந் திருந்த மேகலாபரணம் அறுந்து அதிலிருந்த முத்துக்கள் கீழே சிதறியோடின. அதன் பிறகுதான் நான் துரியோதனனைப் பார்த்தேன். அவன் என்ன எண்ணுவானே என்று தலைகுனிந்து நின்றேன். என் தோழன் துரியோதனன் சிரித்துக்கொண்டே என்னை நோக்கி கீழே சிதறிக்கிடந்த முத்துக்களை எடுக்கவா? கோக்கவா?' என்று கேட்டான். அப்படிப்பட்ட கள்ளங் கபடமற்ற நட்பினனை துரியோதனனை விட்டு நான் வருவது துரோகமல்லவா தாயே!” என்கிருன் கர்ணன். -

இந்தக் கட்டத்தில் வில்லிப்புத்துாரார் எழுதி யுள்ள பாடலைப் பாருங்கள்:

  • மடந்தை பொற் றிரு மே கலைமணி யுகவே

மாசறத் திகழும் ஏகாந்த இடந்தனில் சற்றே நான் அயர்ந்திருப்ப

எடுக்கவோ கோக்கவோ என்ருன்;

திடம் படுத்திடு வேல் இராச ராசனுக்குச் செருமுனைச் சென்று செஞ்சோற்றுக் கடங்கழிப்பதுவே எனக்கினிப் புகழும்

கருமமும் தருமமும்’ என்ருன் இவ்வாறு பழம் பெரும் கதைகளிலே காணப்படும் சிறப்பும் உயர்வும் இனி நாம் எளிதில் படைக்கக் கூடியனவா? எண்ணிப் பாருங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/135&oldid=1322506" இலிருந்து மீள்விக்கப்பட்டது