பக்கம்:நாடகக் கலை 2.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

சாகரன் ஆகிய தேசீய நாடகங்களும் எத்தனை எத்தனையோ ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர் களைச் சுதந்திர இயக்கத்தில் குதிக்கச் செய் திருக்கின்றன ; விடுதலை வெறியூட்டியிருக்கின்றன.

எழுத்தாளனின் முழு வெற்றி

ஒரு எழுத்தாளன் தன்னுடைய இலட்சியத்தில் பூரண வெற்றி பெற வேண்டுமானல் அவன் ஒரு சிறந்த நாடகாசிரியன்' என்ற இடத்தைப் பெற வேண்டும். நாடகாசிரியன் ஆகும்போதுதான் அவ னுடைய கற்பனைகள், கருத்துக்கள் எல்லாம் நாட் -டுக்கும் மக்களுக்கும் பூரணமாகப் பயன்படுகின்றன.

மகாகவி ஷேக்ஸ்பியர், மகாகவி காளிதாசன் என் றெல்லாம் புகழும்போது அவர்கள் நாடகாசிரியர்கள் என்பதை நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். வங்காளத்தில் துவிஜேந்திரலால்ராய் என்ற பெரியவர் இருந்தார். அவர் சிறந்த நாடகாசிரியர். கதை, கட்டுரை, கவிதை எல்லாம் எழுதியிருக்கிருர். ஆனல் அவரை நாடகாசிரியர் துவிஜேந்திரர் என்றே எல் லோரும் குறிப்பிடுகிருர்கள். பேரறிஞர் பெர்னுட்ஷா எப்போது உலகப் புகழ் பெற்ருர் தெரியுமா? நாட கங்கள் எழுதிச் செல்வாக்குப் பெற்ற பிறகுதான். இவை எல்லாம் எதைக் குறிக்கிறது? கட்டுரை, சிறு கதை, நாவல் எழுதுவதைவிட நாடகம் எழுதுவது கஷ்டமானது என்பது மட்டுமன்று; நாடகம் மக்க ளுக்கு அதிகப் பயனைத் தரக்கூடியது என்பதுதான் 全一每TG莎且B。

இத்தகைய பெருமை வாய்ந்த நாடகக் கலையை நீங்கள் வெறும் வேடிக்கை நிகழ்ச்சியாகக் கருதக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/140&oldid=1322511" இலிருந்து மீள்விக்கப்பட்டது