பக்கம்:நாடகக் கலை 2.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135

கூடாது. நல்ல நாடக நிகழ்ச்சிகள் உங்கள் உள் ளத்தை உயர்த்தி சென்ற காலச் சிந்தனைகளையும் நிகழ்காலத்தின் உண்மைகளையும் வருங்காலத்தின் வளமைகளையும் எடுத்துக் காட்டுகின்றன.

கலைக்கண்ணுடி நாடக மேடை

கண்ணுடியில் முகம் மட்டும்தான் தெரியும். கலைக் கண்ணுடியாகிய நாடக மேடையில் அகத்தையும் பார்க்கலாம். அதல்ைதான் உலகம் ஒரு நாடக மேடை என்றும், நாடக மேடையை உலக அரங்கம் என்றும், உலக நிகழ்ச்சிகளைக் காட்டும் கண்ணுடிகளாக நாடக மேடைகள் விளங்குகின்றனவென்றும் அறிஞர் கள் கூறியிருக்கிருர்கள்.

எனவே, உயர்வான நாடகக்கலை நம்முடைய வாழ்வை உயர்த்த, மனிதப் பண்புடன் வாழ வளர வேண்டும்.

கலையழகும் கருத்தும் நிறைந்த நாடகங்கள்

நல்ல கலையழகுடைய கருத்துப் பிரசார நாட கங்கள் 1924-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் நடை பெற்று வந்திருக்கின்றன.

'இராஜாம்பாள் நா ட க ம், மனத்திற்கொத்த இளைஞனை மணந்து கொள்ள ஒரு மங்கை படும் வேதனையைச் சித்திரிக்கும் நாடகம். h

இராஜேந்திரா நாடகம் ஆலயங்களில் சேவை புரிந்து வரும் அருச்சகர்களில் சிலர் தவருன வழியில் செல்லுவதை எடுத்துக் காட்டியும், தெய்வ சந்நிதியில் கூட இளைஞர்களின் கண்னேட்டம் எவ்வாறு தீய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/141&oldid=1322512" இலிருந்து மீள்விக்கப்பட்டது