பக்கம்:நாடகக் கலை 2.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

நாடகம் தந்த நற்பயன்

அந்தமான் கைதி’ என்ருெரு நாடகம் நடித்தோம். தன் அன்புத் தங்கையின் நல்வாழ்வுக்காக அவளைப் பலவந்தப்படுத்தி மணந்த கிழவனைக் கொலை செய்து விட்டு தீவாந்திர தண்டனை பெறுகிருன் அண்ணன். இந்த நாடகத்தைப் பார்த்த மாவட்ட நீதிபதி சி. எஸ். செளத்திரி அவர்கள், இந்த நாடகம் என் போன்ற நீதிபதிகளுக்கு நீதியை எடுத்துச் சொல்வது போல் இருக்கிறது. இம்மாதிரியான நாடகங்களை என் போன்ற நீதிபதிகள் பார்க்கவேண்டுமென ஆசைப்படு கிறேன்' என்று கூறினர். அப்படிக் கூறியதோடு நிற்கவில்லை. இரண்டு மாதங்களுக்குப்பின் நடந்த ஒரு கொலை வழக்கு அவர் முன் விசாரணைக்கு வந்த போது அந்த வழக்கு அந்தமான் கைதி வழக்குப் போலவே யிருந்ததால் குற்றவாளிக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கினர்.

இப்படி நாடகத்தால் நலன் விளைந்த எத் தனையோ நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறலாம்.

ஷேக்ஸ்பியரின் உள் நாடகம்

நாடகத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்ட செய்தியை நாம் ஆங்கில நாடகங்களிலே கூடப் பார்க்கலாம். மகா கவி ஷேக்ஸ்பியரின் ஹாம் லெட்' நாடகம் உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கு மென்று கருதுகிறேன். -

அந்த ஹாம்லெட் நாடகத்திலேயே உள் நாடகம்' ஒன்று வருகிறது. தன் தந்தையைக் கொலை செய்த குற்றவாளியைக் கண்டு பிடிக்க எண்ணுகிருன் ஹாம்லெட். நாடகம்தான் அதற்கு நல்ல வழி;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/144&oldid=1322515" இலிருந்து மீள்விக்கப்பட்டது