பக்கம்:நாடகக் கலை 2.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139

உணர்ச்சி மிக்க நடிகர்களைக் கொண்டு தன் தந்தையின் கொலை நிகழ்ச்சியை நாடகம்ாக்கி நடிக்க வேண்டும்; சிற்றப்பன் கிளாடியசும் தன் அன்னையும் அந்த நாடகத்தைப் பார்க்கவேண்டும்; அப்போது அவர் களின் மன உணர்ச்சி எப்படி மாறுகிறது என்றெல் லாம் பார்க்க விரும்புகிருன்.

கதையைத் தானே எழுதினன். நடிகர்களை நடிக்கச் சொன்னன். சிற்றப்பனும் தாயும் நாட கத்தைப் பார்த்தார்கள். சிற்றப்பன் முகம் மாறியது. தந்தையைக் கொன்றவன் அவனே என முடிவுக்கு வந்தான் ஹாம்லெட்.

நாடகத்தின் நற்பயனை நன்குணர்ந்திருந்த மகாகவி ஷேக்ஸ்பியர் தமது நாடகத்திலேயே ஒரு உள் நாடகத்தைப் புகுத்தி இந்த அற்புதத்தை விளக்கு கிருர். எனவே, நாடகம் பயனுடையதாக இருக்க வேண்டுமென்பதே மகாகவி ஷேக்ஸ்பியரின் கருத்து மாகும்.

இந்த உண்மையை நன்குணர்ந்துதான் ருசியா, சீனு போன்ற நாடுகளில் நாடகங்கள் நடத்துகிருர்கள். குழந்தைகளுக்கு என்றும், மாணவர்களுக்கென்றும், மற்றவர்களுக்கென்றும் தனித்தனியாக நாடகம் போடுகிருர்கள்; திரைப் படங்களை எடுக்கிருர்கள். இவற்றையெல்லாம் கல்வியிலாகாவின் மூலம் அர சாங்கமே செய்கிறது. நம்முடைய நாட்டிலும் அந்த நிலை வந்துகொண்டிருக்கிறது.

பருவத்திற்கேற்றபடி நாடகம்

பருவத்திற்கு ஏற்றபடி நாடகம் நடத்தும் பழக்கம் நமக்கு இன்னும் ஏற்படவில்லை. எங்களைப் போல் நாடகத்தைத் தொழிலாகக் கொண்டவர்கள் அந்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/145&oldid=1322517" இலிருந்து மீள்விக்கப்பட்டது