பக்கம்:நாடகக் கலை 2.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

சொல்லி அதை நாடெங்கும் பரவச் செய்வது. இத் தகைய பிரச்சாரங்கள் இப்போது நாடகங்களின் மூலம் தமிழ் நாடெங்கும் பரவி வருகின்றன. ஆல்ை நல்ல கருத்துக்கள், உயர்வான எண்ணங்கள் பரவ

←a

நாடகம் எழுதுவது மிகவும் கஷ்டமானது என் பதை முன்பே சொன்னேன். இப்போது தமிழ்நாட்டில் திரைப்படங்கள் மலிந்துள்ள இன்றையச் சூழலில் நாடகம் எழுதுவது மிக எளிதான ஒன்ருகக் கருதப் பட்டு விட்டது.

பண்புகள் நிலக்க வேண்டும்

தாய் மொழியாகிய தமிழைச் சரியாகப் படிக்காத வர்கள் கூட நாடகம் எழுதி அனுப்புகிருர்கள். நாலந்து நாடகப் போட்டிகளில் நாடகத்திற்காக வந்த பிரதிகளைப் படிக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. அந்த அனுபவத்தைக் கொண்டு சொல்லுகிறேன். தமிழனுக்கென்று சில பண்புகள் இருக்கின்றன. நாகரிகம் இருக்கிறது, மரபு இருக்கிறது. இவற்றை யெல்லாம் ஆழ்ந்து படித்துத் தெரிந்து கொண்ட அறிவாளிகள்தாம் நாடகம் எழுத வேண்டும்.

புதுமை மோகம்

மனிதகுலம் இன்று எல்லாவற்றிலும் புதுமை, புரட்சி, மறுமலர்ச்சி என்று பேசி வருகிறது. கதையில் புதுமை, கருத்தில் புரட்சி, எழுத்தில் உணர்ச்சி என் றெல்லாம் விளம்பரங்களில் பார்க்கிருேம். பொது மக்களுடைய இந்தப் புதுமை ஆர்வத்தைப் பயன் படுத்திக் கொண்டு புதுமையென்ற போர்வையில் பொல்லாங்கு செய்கிருர்கள் சிலர். மக்கள் மறுமலர்ச்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/150&oldid=1322522" இலிருந்து மீள்விக்கப்பட்டது