பக்கம்:நாடகக் கலை 2.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145

மோகத்தினுல் புதுமை என்ற பெயரால் நடமாடு

பவைகள் நல்லனவா, தீயனவா என்பதைக் கூடச் சிந்தித்துப் பார்க்கத் தவறிவிடுகிருர்கள்.

புதுமை வரவேற்கப்படும் போது, அல்லது புதுமை உருவாக்கப்படும்போது, பழமை அத்தனையும் குழிதோண்டிப் புதைக்கப்பட வேண்டியவை என்ற முடிவுக்கு வந்துவிடுகிருர்கள்.

நாம் விரும்பும் புதுமை மனித வாழ்வுக்கு நன்மை செய்வதாக இருக்க வேண்டும் என்பதைத்தான் கலைஞன் இலட்சியமாகக் கொள்ள வேண்டும்.

நாடகங்களிலும், திரைப்படங்களிலும் இந்தப் புதுமை ஏமாற்று வித்தை இன்று திறமையாகக் கையாளப்படுகிறது. அறிஞர்கள் என்று நம்மால் கருதப்படுபவர்கள் கூடஇந்தச் செயல்களை ஆதரிக் கிருர்கள்.

கதைக்குப் பொருத்தமோ பொருத்தமில்லையோ கவலையில்லை. வளர்ச்சி பெற்று வரும் மக்களின் உணர்ச்சிகளைப் பயன்படுத்திக் கொள்ளுகிருர்கள். கதை, பாத்திரம், இடம், நேரம் இவற்றைப்பற்றி யெல்லாம் சிந்திக்காமல் எதை வேண்டுமானலும் சொல்லத் துணிந்து விடுகிருர்கள். இப்படி எங்கே யாவது ஏதாவது இரண்டொரு வார்த்தைகளைச் சொல் லிக் கைதட்டல் வாங்கி புதுமையான மறுமலர்ச்சிக் கருத்துக்களைப் புகுத்திவிட்டதாகப் பறை சாற்று கிருர்கள். மறுமலர்ச்சி என்பது எது? - கலைகளின் மூலம் தங்கள் கருத்துக்களை-கொள்கை களைப் பிரசாரம் செய்ய எல்ல்ோருக்கும் உரிம்ை யுண்டு. அதற்காகக் கதையைக் கொலை செய்வது கூடாது. சொல்ல விரும்பும் கருத்துகளுக்கேற்பக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/151&oldid=1322523" இலிருந்து மீள்விக்கப்பட்டது