பக்கம்:நாடகக் கலை 2.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

கதையையும் பாத்திரங்களையும் படைத்துக் கொள்ள வண்டும். அப்புறம் கருத்துக்களைத் தாராளமாகச் சொல்லட்டும். பாத்திரத்தின் தன்மையைக் கொன்று விட்டு மக்களின் மதிப்பைச் சம்பாதிக்க முயல்வது, உயிரைப் போக்கிவிட்டுப் பிணத்திற்கு அலங்காரம் செய்வது போலத்தான் இருக்கும்.

நாடகக் கலையைப் பொறுத்தவரை புதுமைக் கருத்து அல்லது மறுமலர்ச்சிக் கருத்து என்பது மக்களின் கைத்தட்டலின் வாயிலாக வெளி ப் பட்டால் போதாது. பார்ப்பவர் உள்ளத்திலே பாய்ந்து நம் பண்புக்கொத்த முறையில் அது செயலாக வெளிப் பட வேண்டும். அதுவே மறுமலர்ச்சி.

கலைஞனும் அரசியல்வாதியும்!

மற்ருென்று இங்கே சொல்ல விரும்புகிறேன். கலைஞன் அரசியல்வாதி அல்லன். அரசியல்வாதி யாகக் கலைஞன் இருக்கலாம். ஆளுல், அவன் கலை யைக் கையாளும்போது கலைஞளுகவே காட்சி அளிக்க வேண்டும். அரசியல்வாதி எதிர்க்கட்சிக்காரனை ஏசிப் பேசுவான். கலைஞன் அந்த வழியை மேடையில் பின் பற்றக் கூடாது. கண்ட கண்ட இடங்களில் கட்சிப் பிரசாரங்களை அரசியல்வாதி புகுத்தலாம். கலைஞன் அப்படிச் செய்தல் கூடாது. அப்படிச் செய்தால் கலை மறைந்துவிடும். பிரசாரம் மட்டுமே நிற்கும்.

எப்போதுமே ஆக்கவழியில் செல்லுவதுதான் கலை. கலைஞன் ஆக்கத்திற்காகவே வாழ்கிருன். அழிவிற் காக அல்ல. கலையில் அழிவுப்பாதையே கிடையாது.

நன்மைக்காக வளருவதே கலை

'மனிதனுக்கு அறிவிருக்கிறது. அதை நல்ல வழி விலும் திருப்பலாம்; கெட்ட வழியிலும் திருப்பலாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/152&oldid=1322524" இலிருந்து மீள்விக்கப்பட்டது