பக்கம்:நாடகக் கலை 2.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

'கண்ணச் செவியைக் கருத்தைக் கவர்ந்து நமக்(கு) எண்ணரிய போதனைகள் ஈவதற்கு தண்ணுமிந்த நாடகசாலை யொத்த தற்கலாசாலை யொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து’’ இவ்வாறு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் கூறுகின்ருர். நாடகசாலையை யொத்த நல்ல கலாசாலை நீடுலகில் உண்டோ? சொல்' என்று கம் பீரத்துடன் கேட்கிருர் கவிமணி. ஆம்: நாடகசாலையை நல்ல கலாசாலையாக அந்தக் கவிதை உள்ளம் காணுt கிறது. இந்தப் பாடல் எங்கள் அவ்வையார் நாடகத் தைக் கவிமணி அவர்கள் பாராட்டியபோது பாடிய L I sf L—6l) .

இந்தக் கருத்தின்படி நாடக நற்கலாசாலைகள் நாடெங்கும் தோன்ற வேண்டும். அதன் மூலம் மக்களின் கண்ணைச் செவியைக் கருத்தை எல்லாம் கவர்ந்து, அவர்களுக்கு எண்ணரிய போதனைகள் ஈந்து அவர்கள் வாழ்வை வளமுடையதாக்க வேண்டும்; தூய்மைப்படுத்த வேண்டும்.

சொல்லும் செயலும் ஒத்திருக்கும் நல்ல பண் புடைய கலைஞர்கள் நாடகம் எழுத வேண்டும். அப்படிப் பட்ட நாடகங்கள் நாடெங்கும் நடிக்கப் பெறவேண்டும்; ரசிகர்கள் அவற்றை ஆதரித்துப் போற்றுவதன் மூலம் தங்கள் உள்ளங்களை உயர்வு பெறச் செய்யவேண்டும். நாடகத்திலே செய்யப்படும் எந்தப் பிரசாரமும் கதை யழகோடு, கலையழகோடு மனித குலத்தின் நல்வாழ் வுக்கும் வழிகோல வேண்டும். -

கலை வழியே அன்பு வழி; அற வழி.

வளர்க நாடக நற்கலை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/154&oldid=1322526" இலிருந்து மீள்விக்கப்பட்டது