பக்கம்:நாடகக் கலை 2.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

வாழ்க்கை கழிந்தது. இடையிடையே சந்தர்ப்ப சூழ்நிலைகள் திரைப்படவுலகுக்கு என்னை இழுத்துக் கொண்டு போயிருக்கின்றன. 1985 - ஆம் ஆண்டி லிருந்து இதுவரை பல படங்களில் நடித்திருக்கிறேன். நானும் என் சகோதரர்களும் நடித்த 'மேனகா' என்னும் திரைப்படம் 1995-ஆம் ஆண்டின் சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றது. 1953-ஆம் ஆண்டில் திரைப்பட நடிகர் தேர்வில் என்னைச் சிறந்த நடிகனெனத் தேர்ந்தெடுத்துப் பெருமைப் படுத்தி னார்கள். அதன் பிறகு, 1960-ல் தமிழ்நாடு சங்கீத நாடகச் சங்கத்தார், சிறந்த நாடக நடிகன் என என்னைப் பாராட்டிப் பரிசு வழங்கினார்கள். 1962-ல் புது டில்லி மத்திய சங்கீத நாடக அகாடமியின் சார்பில் சிறந்த நாடக நடிகன் எனும் விருதை நம் பாரதக் குடியரசுத் தலைவர் அவர்கள் எனக்கு வழங்கினார்.

இடையிடையே திரைப் படங்களில் நடிக்கும் வாய்ப்பை நான் ஏற்று வந்துள்ள போதிலும், இன்னும் நான் நாடக மேடையில்தான் தொடர்ந்து பணி புரிந்துகொண்டு வருகிறேன். என்னை நாடக நடிகனென்றே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அப்படியே வாழ்ந்தும் வருகிறேன். 1918-இல் தொடங்கிய என் நாடக வாழ்க்கை, நடிகனாகவும், நாடக ஆசிரியனாகவும், நாடகத் தயாரிப் பாளனாகவும் என்னை இதுவரை வளர்த்து வந்திருக் கிறது. இதற்காக நான் பெருமைப்படுகிறேன்.

அக்கால அவல நிலை

நான் நாடகத்துறையிலே இறங்கிய அந்த நாளில் நாடகக் கலைஞர்கள் மிகவும் இழிவாகக் கருதப்பட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/16&oldid=1540093" இலிருந்து மீள்விக்கப்பட்டது