பக்கம்:நாடகக் கலை 2.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

மறைவில் இருந்து கயிற்றை இழுத்து வெகு சாமர்த்தியமாகப் பொம்மைகளை ஆடவும், பாடவும் செய்து விளையாட்டுக் காட்டினார்கள். அதற்குப் 'பொம்மலாட்டம்' என்று பெயரும் வைத்தார்கள். பொருட் காட்சிகள் நடைபெறும் இடங்களில் இன்னும் நீங்கள் பொம்மலாட்டத்தைப் பார்க்கலாம்.

தோற்பாவைக் கூத்து; நிழற் பரவைக் கூத்து

இதே போன்று தோலினாலும் பொம்மைகளைச் செய்து விளையாடினார்கள். அதற்குத் 'தோற்பாவைக் கூத்து' என்று பெயர்.

முன்னால் வெள்ளைத்திரையைப் போட்டு, அந்தத் திரைக்குப் பின்னால் ஒரு விளக்கை வைத்து இடையில் அட்டையினாலோ, காகிதத்தாலோ, செய்த பொம்மை களைக் காட்டி விளையாடினார்கள். அந்த விளையாட்டுக்கு 'நிழற் பாவைக்கூத்து' என்று பெயர். இந்த நிழற் பாவைக்கூத்து இப்போது நம் நாட்டில் அதிகமாக இல்லை. மலேயா, தாய்லந்து பகுதிகளில் சாதாரணமாக நடைபெறுகின்றது. நாங்கள் மலேயா சென்றிருந்தபோது இந்த நிழற் பாவைக்கூத்துக்களைப் பார்த்தோம். இராமாயணம், மஹாபாரதம் ஆகிய கதைகளை இவர்கள் காட்டுகிறார்கள். இப்படிக் காட்டுபவர்கள் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். கலைத்துறை மதவேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது என்பதை இது காட்டுகிறதல்லவா?

நாடக விளையாட்டு

இவ்வாறு உயிரில்லாத பொம்மைகளை வைத்துக் கொண்டு விளையாடுவதைவிட உயிருள்ள மனிதர்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/22&oldid=1540106" இலிருந்து மீள்விக்கப்பட்டது