பக்கம்:நாடகக் கலை 2.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

நண்பர் ஒருவர், 'ஆஹா. இராஜ ராஜ சோழனைப் போல ஒரு ஆட்டத்தை நான் பார்த்ததேயில்லை' என்று பாராட்டினார். இன்னும் ஒரு ரசிக நண்பர் 'என்னவோ ஒரு ஆட்டம் போட்டீர்களே, சமூக நாடகம், அந்த ஆட்டம் மிக நன்றாயிருந்தது' என்றார். நானும் விளையாட்டாக 'நான் எங்கும் ஆட்டம் போடவில்லையே' என்றேன். 'அதுதான் ஐயா 'வாழ்வில் இன்பம்' என்று ஒரு ஆட்டம்'. 'ஓ! நாடகமா?' என்றேன் நான்.

இப்படி நாடகத்திற்கு ஆட்டம் என்று சொல்வது இன்றும் சாதாரணமாக வழக்கத்தில் இருந்து வருகிறது. இதிலிருந்தே ஆடிப்பாடி நடிப்பதுதான் நாடகமாகக் கருதப் பெற்றது என்பது நமக்கு விளங்குகிறதல்லவா? இப்போதெல்லாம் நாடகங்களில் ஆட்டம், நாட்டியம் என்ற முறையில் தனியாக ஆடப் படுகிறதே தவிர எல்லாப் பாத்திரங்களும் ஆடுவதில்லை. அப்படி எல்லோரும் ஆடுவது ‘நடன நாடகம்' என்று தனியாக நடத்தப் பெறுகிறது.

முத்தமிழ்

ஒரு மனிதன் தன்னுடைய எண்ணங்களை மற்றவர்களுக்கு வெளியிடும் ஒலிக்குத்தான் மொழி என்று பெயர். நம்முடைய தமிழ் மொழியில் இதை அருமையாக விளக்குவதற்குத்தான் 'முத்தமிழ்' என்று வகுத்தார்கள் நம்முடைய முன்னோர்கள். இப்போது நான் உங்களுக்கு நாடக வரலாற்றைப்பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறேன் அல்லவா? இப்படி வார்த்தைகளால் விளக்குவது இயல்; இதையே,

நாட்டினிற் கணிகலம் நாடகக் கலையே
பாட்டும் இயலும் எழில் காட்டும் - நவ நிலையே (நா)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/25&oldid=1540109" இலிருந்து மீள்விக்கப்பட்டது