பக்கம்:நாடகக் கலை 2.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

மகாமகோபாத்யாய டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் நூல் நிலையத்தின் வெளியீடாக 1944-இல் 'பரத சேனாபதீயம்' எனப் பழந் தமிழ் நூல் ஒன்று வெளி வந்திருக்கிறது. இந்த நூல் அடியார்க்கு நல்லார் குறிப்பிடும் பரதசேனாபதீயம் தானாவென்பது ஐயத்திற்குரியதாக இருக்கிறது. அடியார்க்கு நல்லார் தம் உரையில் எடுத்துக் காட்டியுள்ள பரதசேனாபதீயம் என்னும் நூலின் மேற்கோள் வெண்பாக்கள் இந்த நூலில் இல்லை.

இவை தவிர பரிதிமாற்கலைஞன் என்னும் திரு. வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார் "நாடக இயல்" என்னும் ஒரு சிறந்த நூலை எழுதியிருக்கிறார். இதில் நாடகத் தைப் பற்றிய பல குறிப்புக்கள் விரிவாகச் சொல்லப் பெற்றிருக்கின்றன. நாடகம் என்றால் என்ன; அது எத்தனை வகைப்படும்; எப்படி எழுத வேண்டும்; நடிப்புக்குரிய இலக்கணங்கள் எவை; கதா நாயகர்களுக்குரிய இலக்கணங்கள் எவை என்பன எல்லாம் ஆராய்ச்சி முறையில் செய்யுள் வடிவில் எழுதப்பட்டிருக்கின்றன.

பேராசிரியர் சுவாமி விபுலானந்தர் அவர்களால் 'மதங்க சூளாமணி' என்னும் ஒரு தமிழ் நூல் வெளியிடப் பெற்றிருக்கிறது. இதுவும் நாடகத்தைப் பற்றிய ஆராய்ச்சி நூலாகும்.

பேராசிரியர் மறைமயைடிகளார் சாகுந்தல நாடகத் தைப் பற்றிய ஆராய்ச்சி ஒன்று வெளியிட்டிருக்கிறார். இதுவும் நன்கு பயன்தரக் கூடிய ஆராய்ச்சி என்பது அறிஞர்கள் கருத்து.

நாடகப் பேராசிரியர் பத்ம பூஷணம் பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள் பழம் பெரும் தமிழ் நூல்களையெல்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/28&oldid=1540128" இலிருந்து மீள்விக்கப்பட்டது