பக்கம்:நாடகக் கலை 2.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கட்டியக்காரன் வசனத்தோடு முழுதும் பாடல்களால் அமைந்தன. இவருடைய 1712 காலம் முதல் 1799 வரை.

நொண்டி நாடகங்கள்

பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் 1695 முதல் சில நொண்டி நாடகங்கள் இருந்திருக்கின்றன. திருக்கச்சூர் கொண்டி நாடகம், பழனி கொண்டி நாடகம், சீதக்காதி கொண்டி நாடகம் இவ்வாறு பலவகைப்பட்ட நொண்டி நாடகங்கள். பெரும்பாலும் இந்த நொண்டி நாடகத்திற்குரிய கதை—

'கதா நாயகன் தீயவனாக இருந்து காமுகன் வலை யில் சிக்கி, பிறகு தண்டனைக்குட்பட்டு அவயவங்களை இழந்தவனாகி, நொண்டியாய் ஒரு தெய்வத்தை வேண்டி வழிபட, இழந்த அவயவங்களை மீண்டும் பெறுகிறான்' என்பதே. ஏறக்குறைய எல்லா நொண்டி நாடகங்களும் இம்மாதிரியாகவே இருக்கும்.

கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தனார் சரித்திரக் கீர்த்தனையைப்பற்றி நமக்கெல்லாம் நன்றாகத் தெரியு யும். அவை நாடக மேடையில் பல நடிகர்களால் பாடப் பெற்றவை. இன்னும் கதா காலட் சேபங்களில் பாடப்பெற்று வருபவை. ஹிரண்ய சம்ஹார நாடகம், உத்தர ராமாயண நாடகம், கந்தர் நாடகம், காத்தவ ராயன் நாடகம், பாண்டவர் சூதாட்ட நாடகம், வள்ளியம்மை நாடகம், சிறுத்தொண்டர் நாடகம் - இவ்வாறு பல்வேறு நாடகங்கள் பெரும்பாலும் பாடல்களாகவும் ஒருசிறிது கட்டியக்காரன் வசனத்தோடு கூடியதாகவும் அமைந்திருக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/33&oldid=1540270" இலிருந்து மீள்விக்கப்பட்டது